அத்திப்பட்டி போல.. ஒட்டுமொத்த நாடும் மாயமாகுமாம்.. ஜப்பானுக்கு வல்லுநர்கள் வார்னிங்! என்ன பிரச்சினை
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் இப்போது மிகப் பெரிய ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த ஆபத்தால் ஒட்டுமொத்த ஜப்பானும் உலக மேப்பில் இருந்து மாயமாகக் கூட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகில் மிக முக்கியமான வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருப்பது ஜப்பான். ஜிடிபி அடிப்படையில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ஜப்பான் இருக்கிறது. கிழக்கு ஆசியாவில் குட்டி நாடாக இருக்கும் ஜப்பான், பெரிய நாடுகளை பின்னுக்கு தள்ளி ஜிடிபியில் முன்னிலையில் இருக்கிறது.

இப்படித் தலைசிறந்த இடத்தில் இருக்கும் ஜப்பான் இப்போது மிகப் பெரிய சிக்கலில் மாட்டியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த ஜப்பானும் கூட வரும் காலத்தில் காணாமல் போக வாய்ப்புள்ளது. அப்படி என்ன பெரிய சிக்கல் எனக் கேட்கிறீர்களா வாங்கப் பார்க்கலாம்.
மிகப் பெரிய ஆபத்து: ஜப்பான் நாட்டை பொறுத்தவரை அங்கே மக்கள்தொகை சரிவு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அங்குள்ள இளைஞர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் குழந்தை பிறப்பு அங்குத் தொடர்ந்து குறைந்து வருகிறது. மறுபுறம் வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஜப்பான் மிகப் பெரிய சிக்கலைக் கொண்டுள்ளது. கொஞ்சம் மிஸ்ஸானாலும் ஜப்பான் சீர்குலைந்து போக வாய்ப்புகள் மிக மிக அதிகம்.
ஜப்பானுக்கு இப்போது மிக வேகமாக வயதாகிறது. இப்போது ஜப்பானில் உள்ள 10% பேர், அதாவது அங்கு 10இல் ஒருவர் 80 வயதைக் கடந்த முதியவர்கள். அதேபோல அங்குள்ள மொத்த மக்கள்தொகையில் 29% பேர் 65 வயதைக் கடந்தவர்கள் ஆகும். இந்த எண்ணிக்கை வரும் காலத்தில் மேலும் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உலகின் வேறு எந்த நாடுகளைக் காட்டிலும் ஜப்பானில் குழந்தை பிறப்பு குறைவாக இருக்கிறது. அவர்கள் வேகமாக வயதாகிறார்கள்.
என்ன பிரச்சினை: ஒரு நாட்டில் வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரித்து, இளைஞர்களின் மக்கள் தொகை குறைந்தால் அங்கே பல பிரச்சினைகள் ஏற்படும். வேலை செய்யும் வயதில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை குறையும் போது, அந்நாட்டின் உற்பத்தி குறையும். இது வளர்ச்சியைப் பாதிக்கும். அதேபோல வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அவர்களுக்கு ஓய்வூதியம், மருத்துவச் செலவுகள் உள்ளிட்டவற்றையும் கவனிக்க வேண்டி இருக்கும். இதுவும் ஒரு நாட்டிற்குத் தலைவலியாக மாறும்.
ஜப்பானும் கிட்டதட்ட அதே ஒரு நிலையில் தான் இருக்கிறது. ஜப்பானில் வயதானவர்களின் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது. இதனால் மற்ற நாடுகளில் ஓய்வு பெரும் வயதில் இருப்போரும் கூட ஜப்பானில் வேலைக்குச் செல்ல வேண்டி இருக்கிறது. அங்கு 70 முதல் 74 வயதில் இருக்கும் நபர்களில் 4இல் மூன்று பேர் வேலைக்குச் செல்கிறார்கள். இது ஜப்பான் எந்த நிலைமையில் இருக்கிறது என்பதைக் காட்டுவதாக உள்ளது.
இரண்டு பக்கமும் சிக்கல்: அங்கே ஒரு பக்கம் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், மற்றொரு புறம் பிறப்பு விகிதம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. உலகிலேயே மிகவும் குறைவான பிறப்பு விகிதத்தைக் கொண்ட நாடாக ஜப்பான் இருக்கிறது. அங்கே மக்கள் தொகையைச் சமாளிக்கும் அளவுக்கு வைக்கக் குழந்தை பிறப்பு விகிதம் 2.1ஆக இருக்க வேண்டும். ஆனால், இப்போது அங்கே குழந்தை பிறப்பு விகிதம் 1.30 ஆகவே உள்ளது.
ஜப்பானில் கடந்த ஆண்டு, 15 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் புதிதாகப் பிறந்ததோ வெறும் 800,000 லட்சம் பேர் தான். ஜப்பானில் குழந்தையை வளர்க்க ஆகும் செலவு, குழந்தை பராமரிப்பு செலவுகள் உள்ளிட்ட பல காரணங்களால் அங்கே பல இளைஞர்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள ஒப்புக்கொள்ளவில்லை.












Click it and Unblock the Notifications