ஸ்லிம்.. சந்திரயான்-3யை விட வேகம் குறைவு! நிலவை அடைய ஜப்பான் விண்கலம் 4 மாதம் எடுப்பது ஏன்? பின்னணி
டோக்கியோ: ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா சார்பில் நிலவுக்கு ‛ஸ்லிம்' விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் நிலவை 4 முதல் 6 மாதங்களுக்குள் அடைய உள்ளது. இது சந்திரயான்-3 விண்கலத்தை விட மிகவும் மெதுவான பயணமாக உள்ள நிலையில் தான் அதன் பின்னணியில் உள்ள முக்கிய விஷயம் பற்றி விபரம் வெளியாகி உள்ளது.
தற்போது நிலவு குறித்த ஆராய்ச்சி பணியை உலக நாடுகள் அதிகரித்துள்ளன. அதன்படி கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி இந்தியா சார்பில் சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென்துருவத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 40 நாட்கள் பயணத்தை தொடர்ந்து இந்த விண்கலம் கடந்த மாதம் 23ம் தேதி மாலையில் விக்ரம் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது.

இதையடுத்து விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை நிலவின் தென்துருவத்தில் ஆய்வை தொடங்கின. 11 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஆய்வு நடந்த நிலையில் தற்போது அங்கு இருள் சூழ்ந்துள்ளதால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உள்ளிட்டவை உறக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வரும் 22ம் தேதி மீண்டும் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் செயல்பாட்டை தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
சந்திரயான் - 3 மூலம் இந்தியா மகத்தான சாதனையை படைத்தது. அதாவது நிலவில் கால்பதித்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த 4வது இடத்தை இந்தியா பெற்றது. அதோடு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதற்கிடையே தான் தென்துருவத்தில் இந்தியாவை முந்தி தரையிறங்க ரஷ்யா முடிவு செய்தது.
இதற்காக ரஷ்யா சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய லூனா 25 என்ற விண்கலம் கடந்த மாதம் 10ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் வெறும் 22 நாளில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என கூறப்பட்டது. அதாவது இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலத்துக்கு முன்பாக 21ம் தேதி நிலவில் லூனா- 25 தரையிறங்கும் என தெரிவிக்கப்ட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கேளாறால் லூனா 25 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் விழுந்து நொறுங்கியது. இதனால் ரஷ்யாவின் முயற்சி தோல்வியடைந்தது.
இந்த வரிசையில் தான் இந்தியா, ரஷ்யாவை தொடர்ந்து ஜப்பான் சார்பில் நிலவு குறித்த ஆய்வுக்காக ‛ஸ்லிம்' விண்கலம் என்பது விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இதேபோல நிலவுக்கு ஜப்பான் ஸ்லிம் என்ற விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக கடந்த வாரம் ஸ்லிம் விண்கலத்தை ஜப்பான் விண்ணில் ஏவவில்லை. மோசமான வானிலையால் மொத்தம் 3 முறை ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் என்பது நிலவில் உள்ள பாறைகளை ஆய்வு செய்ய உள்ளது.
ஜப்பான் நாட்டின் ‛ஸ்லிம்' விண்கலம் நிலவில் தரையிறங்க குறைந்தது 4 முதல் 6 மாதங்கள் ஆகும். இதற்கிடையே தான் பலருக்கும் கேள்விகள் எழுந்துள்ளன. அதாவது நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் 40 நாளில் தரையிறங்கியது. ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் வெறும் 13 நாளில் நிலவின் தென்துருவத்தை அடைந்து மயிரிழையில் தரையிறங்குவதில் தோல்வியடைந்தது. இத்தகைய சூழலில் ஜப்பானின் ‛ஸ்லிம்' விண்கலம் ஏன் நிலவில் தரையிறங்க 4 முதல் 6 மாதங்கள் எடுத்து கொள்கிறது என்ற கேள்வி பலரின் மூளையில் உதித்துள்ளது.
இந்நிலையில் அதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜப்பானின் விண்கலத்தின் பெயரை பார்த்தாலே நாம் ஒன்றை புரிந்து கொள்ள முடியும். ‛ஸ்லிம்' என்பதற்கு எடை குறைவு என்ற பொருள் உண்டு. அதன்படி ஜப்பான் விண்கலத்தின் எடை என்பது மிகவும் குறைவானதாகும். சந்திரயான் 3ல் பிரக்யான் ரோவரின் (26 கிலோ) எடையுடன் சேர்த்து விக்ரம் லேண்டர் என்பது 1,752 கிலோ எடையுடன் இருந்தது. ஆனால் ஜப்பான் விண்கலம் என்பது வெறும் 200 கிலோ எடையுடன் தான் உள்ளது. இந்த எடை குறைப்புக்கு முக்கிய காரணம் என்பது அதில் உள்ள கருவிகளின் எண்ணிக்கையை குறைத்தது தான் காரணம்.
தற்போது நிலவை நோக்கி பயணிக்கும் ஸ்லிம் விண்கலத்தில் ஆய்வுக்காக மொத்தம் 2 கருவிகள் மட்டுமே உள்ளன. ஒன்று நேவிகேஷன் கேமரா, இன்னொன்று லேசர் ரேஜ்ஃபைண்டர், இரண்டும் குறைந்த எடையில் அதேவேளையில் துல்லியமாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறிய வகை ரேடார் கருவி என்பது விண்கலம் பற்றிய விபரங்களை பெறவும், சேலார் பேனல்கள் சூரியஒளி மூலம் தேவையான சக்தியை உற்பத்தி செய்யவும் பொருத்தப்பட்டுள்ளது. இதுவும் வழக்கத்தை விட மிகவும் குறைந்த எடையில் சிறியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இந்த விண்கலம் என்பது கனசதுரம் (cuboid) வடிவத்தில் 200 கிலோ எடையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சந்திரயான் - 3 விண்கலம் என்பது ப்ரோபல்ஷன் மாடூல் மூலம் பூமி சுற்றுவட்டபாதையை கடந்து நிலவின் சுற்றுவட்டபாதைக்குள் நுழைந்தது. ஆனால் ஜப்பானின் இந்த விண்கலத்தில் அப்படி தனியே எந்த கருவியும் இல்லை. மாறாக விண்கலத்தில் Propellent Tank உள்ளது. இதுதான் விண்கலத்தை நிலவுக்கு கொண்டு செல்ல உள்ளது.
இதில் உள்ள 500 N செராமிக் என்ஜின்கள் சுற்றுவட்டபாதையை உயர்த்த பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக 22 N த்ரஸ்டர்கள் 12 உள்ளன. இதன் உதவியுடன் சொந்தமாக கிடைக்கும் உந்துவிசையை பயன்படுத்தி நிலவை நோக்கி ஸ்லிம் விண்கலம் பயணிக்க உள்ளது. இதனால் தான் இந்த விண்கலம் என்பது நிலவை சென்றடைய 4 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விண்கலத்தின் ஸ்பெஷல் என்வென்றால் நிலவில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் இறங்க வைக்கும் முடியுமாம். தற்போதைய சூழலில் நிலவின் பூமத்திய ரேகை பகுதியில் Sea of Nectar எனும் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் தரையிறக்கப்படலாம் என கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications