அந்த ஒற்றை சம்பவம்! பொங்கி எழுந்த ஜஸ்டின் ட்ரூடோ.. கனடாவில் பரபரக்கும் டிரக் ஓட்டுநர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

ஓட்டாவா: கனடா நாட்டில் டிரக் ஓட்டுநர்கள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், கடந்த வாரம் நடந்த ஒற்றை சம்பவம், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவை அவசரநிலையை அறிவிக்க வைத்துள்ளது.

2 ஆண்டுகளைக் கடந்தும் கொரோனா பாதிப்பு தான் உலக நாடுகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வளர்ந்த நாடுகளாக அறியப்படும் அமெரிக்கா, பிரிட்டன் கூட கொரோனா வைரஸ் காரணமாக மோசமான பாதிப்பை எதிர்கொண்டன.

கொரோனா வைரஸ் காரணமாக ஒருபுறம் உயிரிழப்புகள் ஏற்பட்டது என்றால் மறுபுறம் மோசமான பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது. கொரோனா வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட பின்னர் தான், வைரஸ் பாதிப்பு குறைந்து பொருளாதாரம் மேம்பட்டது.

 கொரோனா வேக்சின்

கொரோனா வேக்சின்

கொரோனா வேக்சின்கள் தீவிர பாதிப்பு மட்டுமின்றி உயிரிழப்புகளைக் கணிசமாகக் குறைக்கிறது. வேக்சின் போட்டுக் கொண்டவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும் கூட, அதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படுவதில்லை. இருப்பினும், சிலர் வேக்சின் போட்டுக் கொள்ளத் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். இதையடுத்து உலக நாடுகள் வேறு வழியின்றி வேக்சினை கட்டாயப்படுத்தும் விதமாக சில கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அதன்படி கனடா -அமெரிக்கா எல்லைகளைக் கடக்க வேக்சின் கட்டாயம் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளைக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார்.

 அவசர நிலை

அவசர நிலை

இது கனடா நாட்டின் டிரக் ஓட்டுநர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்நாட்டின் டிரக் ஓட்டுநர்கள் கடந்த ஜன. 29ஆம் தேதி முதல் தலைநகர் ஒட்டாவாவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையோரங்களில் டிரக்குகளை நிறுத்திவிட்டு, தற்காலிக கூடாரங்கள் அமைத்து அரசின் இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தொடர்ச்சியாக அவர்கள் ஹாரன்களை ஒலிக்கவிட்டு வருவதால் அது அங்கு வசிக்கும் மக்களுக்கு பெரும் தொந்தரவை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த நாட்டில் அவசர நிலையைக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.இது கனடா நாட்டின் டிரக் ஓட்டுநர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்நாட்டின் டிரக் ஓட்டுநர்கள் கடந்த ஜன. 29ஆம் தேதி முதல் தலைநகர் ஒட்டாவாவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையோரங்களில் டிரக்குகளை நிறுத்திவிட்டு, தற்காலிக கூடாரங்கள் அமைத்து அரசின் இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தொடர்ச்சியாக அவர்கள் ஹைரன்களை ஒலிக்கவிட்டு வருவதால் அது அங்கு வசிக்கும் மக்களுக்கு பெரும் தொந்தரவை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதையடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்த நாட்டில் அவசர நிலையைக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

 டிரக் ஓட்டுநர்கள்

டிரக் ஓட்டுநர்கள்

முதலில் வேக்சின் கட்டாயம் என்ற அறிவிப்புக்கு எதிராக மட்டும் போராட்டத்தைத் தொடங்கிய டிரக் ஓட்டுநர்கள், இப்போது வேறு சில கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளனர். அதாவது உணவகங்கள் மற்றும் திரையரங்குகள் செல்ல மாஸ்க், தடுப்பூசி பாஸ்போர்ட்கள் கட்டாயம் தேவை உள்ளிட்ட அனைத்து விதமான கொரோனா வேக்சின் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். உச்சபட்சமாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் கடந்த சில வாரங்களாகவே கனடா நாட்டில் அமைதியற்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

 முக்கிய பாலம்

முக்கிய பாலம்

கடந்த வாரம், இந்த போராட்டக்காரர்கள் அமெரிக்காவில் வின்ட்சர், ஒன்டாரியோ மற்றும் டெட்ராய்ட் இடையே உள்ள அம்பாசிடர் பாலத்தை மறித்தனர். இது கனடா மற்றும் அமெரிக்காவை இணைக்கும் மிக முக்கியமான பாலம் ஆகும். இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் அனைத்து வர்த்தகத்தில் 25% இந்த பாலத்தில் வழியே தான் நடைபெறுகிறது. டிரக் ஓட்டுநர்கள் இந்த பாலத்தை மறித்ததால் ஜிஎம், போர்டு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பணியாளர்களின் ஷிப்டை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

 பொங்கி எழுந்த ஜஸ்டின் ட்ரூடா

பொங்கி எழுந்த ஜஸ்டின் ட்ரூடா

இதுவரை அமைதி காத்து வந்த ஜஸ்டின் ட்ரூடாவை டிரக் ஓட்டுநர்களின் இந்த செயல் தான் ஆத்திரப்படுத்தியது இதனால் தான், தடாலடியாக இன்று நாடு முழுக்க அவசர நிலையை அவர் அறிவித்துள்ளார். மேலும், போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளிலும் அவர் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "வேக்சின் மற்றும் இதுபோன்ற கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் காரணமாகக் கனடா நாட்டில் 90% பேர் வேக்சின் போட்டுள்ளனர். இதனால் தான் உலகின் மற்ற பகுதிகளைப் போலக் கனடா நாட்டில் மோசமான கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

 கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

போராட்டத்தை ஒடுக்க ராணுவம் பயன்படுத்தப்பட மாட்டாது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். அதேநேரம் அத்தியாவசிய பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் அதைத் தடுக்கும் வகையில் செயல்பட்டால், பாரபட்சமின்றி டிரக்குகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும், டிரக் ஓட்டுநர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்றும் அவர்களது இன்சூரன்ஸ் சஸ்பெண்ட் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போராட்டம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

    Canada-வில் தீவிரமடையும் போராட்டம்.. குறிவைக்கப்பட்ட Justin Trudeau
     போராட்டம்

    போராட்டம்

    கொரோனா உயிரிழப்புகளும் அமெரிக்காவை விட மூன்றில் ஒரு பங்காகவே கனடா நாட்டில் உள்ளது. அதேபோல அமெரிக்காவைக் காட்டிலும் கனடா நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாகவே உள்ளது. இருப்பினும், பெரும்பாலான கனடா மக்கள் இதுபோன்ற கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாகவே உள்ளனர். அதேபோல அங்கு பணிபுரியும் 90% டிரக் ஓட்டுநர்கள் ஏற்கனவே, வேக்சின் போட்டுள்ளனர். சிறு டிரக் ஓட்டுநர்கள் அமைப்புகள் மட்டுமே வேக்சின் போடவில்லை என்றும் அவர்களே போராட்டத்தை நடத்தி வருவதாகவும் கனடா அரசு தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+