ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு தூக்கு! கேரள நர்ஸ் இவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டியது எப்படி! என்ன நடந்தது
சனா: ஏமன் நாட்டில் செவிலியராக வேலைக்குச் சென்ற நிமிஷா பிரியா கடந்த 7 ஆண்டுகளாகவே கொலை வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரை காப்பாற்றப் பல்வேறு பேச்சுவார்த்தைகள் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருப்பினும், இப்போது அவருக்கு அடுத்த வாரம், அதாவது ஜூலை 16ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. நிமிஷா பிரியா எதற்காக ஏமன் சென்றார்.. அங்கு அவருக்கு என்ன நடந்தது.. அதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
ஏமன் நாட்டிற்குச் சென்ற நிமிஷா பிரியாவுக்கு கொலை வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரை வெளியே கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அது தோல்வியிலேயே முடிந்தது. இந்தச் சூழலில் தான் அவருக்கு ஜூலை 16ம் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த நிமிஷா பிரியா இவரது பின்னணி மற்றும் இவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

நிமிஷா பிரியா
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, ஏமனில் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். அவர் கடந்த 2008ம் ஆண்டு முதல் ஏமன் நாட்டில் பணிபுரிந்து வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் அவர் நர்ஸாக பணிபுரிந்தார். இந்தச் சூழலில் தான் அங்குத் திடீரென உள்நாட்டுப் போர் ஏற்பட்டது..
இதனால் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது கணவர் மற்றும் மகள் 2014ஆம் ஆண்டு இந்தியாவிற்குத் திரும்பினர். உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த நிலையில், இதனால் அவர் பொருளாதார நெருக்கடியை அதிகம் எதிர்கொள்ள ஆரம்பித்தார். இந்தச் சூழலில் தான் அவர் சொந்தமாக ஒரு கிளினிக் தொடங்க முடிவு செய்தார்.
என்ன நடந்தது?
ஆனால், ஏமன் நாட்டுச் சட்டப்படி வெளிநாட்டினர் சொந்தமாக பிஸ்னஸ் தொடங்க முடியாது. அதாவது நிமிஷா பிரியாவால் சொந்தமாக கிளினிக் தொடங்க முடியாது. இதன் காரணமாக அவர் மஹ்தி என்பவரை அணுகியுள்ளார். மஹ்தி ஏமன் நாட்டுக் குடிமகன்.. இதனால் இருவரும் சேர்ந்து கிளினிக்கைத் தொடங்க முடிவு செய்தனர். அதன்படியே கிளினிக்கை ஆரம்பித்துள்ளனர். தொடக்கத்தில் சில காலம் எல்லாமே நன்றாகவே போய்க் கொண்டு இருந்தது.
மார்பிங் செய்து மிரட்டல்
ஆனால், சில காலத்தில் நிமிஷாவை மிரட்ட ஆரம்பித்த மஹ்தி, கிளினிக் வருமானம் முழுவதையும் பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, நிமிஷாவின் புகைப்படங்களை மார்பிங் செய்து, இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டதாகச் சொல்லி மற்றவர்களை ஏமாற்றியுள்ளார். இருவருக்கும் கல்யாணம் நடந்துவிட்டதால் கிளினிக் வருமானம் தனக்கே சொந்தம் என்றும் மஹ்தி கூறியிருக்கிறார். இதனால் நிமிஷா யாரிடம் புகார் சொன்னாலும் அதுவும் எடுபடவில்லை.
பாஸ்போர்ட்
ஒரு கட்டத்தில் நிமிஷாவின் பாஸ்போர்ட்டையும் அவர் பிங்கி வைத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் நிமிஷா போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். அப்போது மஹ்தி சில காலம் மட்டுமே கைது செய்யப்பட்டார். பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். அப்போது ஜெயில் வார்டன் ஒருவர் அளித்த ஆலோசனையின்படியே, மஹ்திக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போர்ட்டை எடுக்க நிமிஷா முயற்சி செய்துள்ளார்.
இருப்பினும், அப்போது தான் எதிர்பாராதவிதமாக மயக்க மருந்தின் அளவு அதிகமாகியுள்ளது. இதனால் மஹ்தி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது நாட்டை விட்டுத் தப்பியோட முயன்றபோது நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். முதலில் அவருக்குக் கீழமை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பல்வேறு மேல்முறையீடுகள் செய்யப்பட்ட போதிலும், பலன் கிடைக்கவில்லை. ஏமன் சுப்ரீம் கோர்ட்டும் மரண 2023ல் மரண தண்டனையை உறுதி செய்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications