சீனா அவ்வளவு தான் போலயே.. வந்துவிட்டது மெகா பிரச்சினை.. என்ன செய்தாலும் சரி ஆகாது போல..! வார்னிங்

சீனாவின் மக்கள் தொகையே இப்போது அதற்குப் பிரச்சினையாக மாறியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவுக்கு இப்போது மிகப் பெரிய பிரச்சினையாக மக்கள் தொகை மாறியுள்ளது. இத்தனை காலம் மக்கள் தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த போராடி வந்த சீனா, இப்போது தலைகீழாக மக்கள் தொகையை அதிகரிக்கத் தெரியாமல் குழம்பிப் போய் உள்ளது.

உலகிலேயே அதிகப்படியான மக்கள் தொகையைக் கொண்ட நாடுகள் பட்டியலில் டாப் இடத்தில் உள்ளது சீனாவும் இந்தியாவும் தான். குறிப்பாகச் சீனா தான் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.

சமீபத்தில் தான் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்திற்கு வந்தது. இருந்தாலும் கூட சுமார் 140 கோடியைக் கொண்ட சீனா, ரொம்ப பின்னால் இல்லை.

மக்கள் தொகை

மக்கள் தொகை

மக்கள் தொகை இந்தளவுக்கு அதிகமாக இருப்பது பிரச்சினையாகவும் இருக்கிறது. அதேநேரம் சில விஷயங்களில் சாதகமாகவும் இருக்கிறது. பிரச்சினை என்னவென்றால் இவ்வளவு அதிக பேர் இருப்பதால்.. வேலை தொடங்கி அனைத்திற்கும் கடும் போட்டி நிலவுகிறது. இந்தியாவிலேயே சில நூறு அரசு வேலைக்கு லட்சக் கணக்கில் விண்ணப்பங்கள் வருவதைப் பார்த்திருப்போம்.. இதில் நல்லது என்னவென்றால்.. அதிகப்படியான மக்கள் இருப்பதால் உழைக்கும் வயதில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை ரொம்பவே அதிகமாக இருக்கும். இதனால் நாட்டின் வளர்ச்சி வேகமாக இருக்கும். இதில் உழைக்கும் வயதில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை ரொம்பவே முக்கியமானது.

சீனா

சீனா

இந்த விஷயத்தில் தான் சீனா இப்போது மிகப் பெரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. ஒரு காலத்தில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த சீனா, மக்கள் தொகையைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இப்போது இந்த நடவடிக்கையே அதற்குத் தலைவலியாக மாறியுள்ளது. இப்போது சீனா நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்த புதிய வழிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் , நாட்டின் பிறப்பு விகிதத்தை உயர்த்த வழிகளைக் கண்டறியுமாறு உத்தரவிட்டுள்ளார்.

நடவடிக்கை தேவை

நடவடிக்கை தேவை

இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "மக்கள் தொகையைக் குறைக்க மிகக் கடுமையான கட்டுப்பாடுகளைச் சீனா அமல்படுத்தியது. இது வரும் கால வளர்ச்சியில் சீனாவின் வளர்ச்சியைப் பாதிக்கும். இப்போது தான அவர்கள் இதை உணர்ந்துள்ளனர். அதைச் சரி செய்யும் நடவடிக்கையில் முழு வீச்சில் இறங்கியுள்ளனர். குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்விச் செலவைக் கண்டே சீனர்கள் இப்போது குழந்தை பெற்றுக் கொள்ளத் தயங்குகிறார்கள்.. இதைக் குறைக்கத் துணிச்சலான மற்றும் புதுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது.. அப்போது தான் பலரும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்..

செலவுகள்

செலவுகள்

குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்விச் செலவைக் குறைக்க புதிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இளம் வயது ஜோடிகள் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுக்க இதுவே காரணம்.. இதைச் சீனா சரி செய்துவிட்டால்.. நிலைமை ஓரளவுக்குச் சீராகும். பிஸ்னஸ் மற்றும் வேலைகளில் சீனாவில் பல பிரச்சினைகள் உள்ளன. இதுவும் மக்கள் தொகை குறைய முக்கிய காரணமாக இருக்கிறது. இளம் ஜோடிகள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்க.. சீன அரசு தனது பழைய கொள்கைகளை ஓரம்கட்டி வைத்துவிட்டு துணிச்சலான திட்டங்களைக் கொண்டு வர வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஊக்க தொகை

ஊக்க தொகை

பிறப்பு விகிதத்தை அதிகரிக்கச் சீனாவில் இருக்கும் சில மாகாணங்கள் ஏற்கனவே புதிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.. குறிப்பாக விந்து தானம் செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல சிச்சுவான் மாகாணத்தில் இதுவரை திருமணம் செய்து கொள்ளாத ஜோடிகள் குழந்தை பெற்றுக் கொள்ளத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. குழந்தைகள் பெற்றெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் அந்த தடையை இப்போது நீக்கியுள்ளனர்.

ஒரு குழந்தை பாலிசி

ஒரு குழந்தை பாலிசி

சீனா இத்தனை ஆண்டுகளாக ஒரு குழந்தை கொள்கையைப் பின்பற்றி வந்தது. அதாவது ஒரு தம்பதி ஒரு குழந்தையை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விதி இருந்தது. நிலைமை மோசமாவதை உணர்ந்த சீனா, இதில் முதலில் சில தளர்வுகளை அறிவித்தது. அப்போதும் நிலைமை முன்னேறாத நிலையில், இந்த விதை முற்றிலுமாக நீக்கிவிட்டது. சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவின் மக்கள் தொகை சரிந்துள்ளது. 6 தலைமுறைகளில் முதல் முறையாகச் சீன மக்கள் தொகை குறைந்துள்ளது.

பிறப்பு விகிதம்

பிறப்பு விகிதம்

2022 ஆம் ஆண்டில், சீனாவில் பிறப்பு விகிதம் 6.77 ஆகச் சரிந்துள்ளது. 60 ஆண்டுகளில் இதுதான் மிகக் குறைந்த குறைந்த பிறப்பு விகிதம் ஆகும். இதற்கு முந்தைய ஆண்டில் பிறப்பு விகிதம் 7.52ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால்.. இந்தியாவில் இந்த பிறப்பு விகிதம் 17.163ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தனை காலம் மக்கள் தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த போராடி வந்த சீனா, இப்போது தலைகீழாக மக்கள் தொகையை அதிகரிக்கத் தெரியாமல் குழம்பிப் போய் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+