கவனம் மக்களே! இன்று தான் ஹார்ட் அட்டாக் அதிகம் ஏற்படுமாம்.. அலர்ட் தரும் புது ஆய்வு முடிவுகள்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இப்போதெல்லாம் இளைஞர்கள் மத்தியிலும் மாரடைப்பு ஏற்படுவது வெகுவாக அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக அதிர்ச்சி தரும் புதிய ஆய்வு முடிவுகள் குறித்துப் பார்க்கலாம்.

முன்பு வயதானோர் அல்லது இணைய நோய் உள்ளவர்கள் மத்தியில் தான் மாரடைப்பு அதிகம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் உணவுப் பழக்கம், மாறி வரும் வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரங்களால் இப்போது இளைஞர்கள் அவ்வளவு ஏன் குழந்தைகள் மத்தியிலும் கூட ஹார்ட் அட்டாக் அதிகம் ஏற்படுவது அதிகரித்துள்ளது.

Why researchers warns that heart attacks are higher on Monday

இதனால் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டி உள்ளது. இதற்கிடையே பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷன் அமைப்பினர் ஹார்ட் அட்டாக் குறித்து சில முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

எப்போது அதிகம் ஏற்படுகிறது: பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனின் நடத்தி இந்த ஆய்வில் மற்ற அனைத்து நாட்களையும் காட்டிலும் திங்கட்கிழமைகளில் தான் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறியுள்ளனர். அதாவது மற்ற நாட்களைக் காட்டிலும் திங்கள்கிழமை மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 13% வரை அதிகமாக இருக்கிறதாம். இதனை ஆய்வாளர்கள் 'ப்ளூ திங்கட்கிழமை' என்றே குறிப்பிடுகிறார்கள்.

மேலும், இதயம் சார்ந்த பிரச்சினைகள் அதிகாலை 6 மணி முதல் 10 மணி வரை ஏற்படவே அதிகம் வாய்ப்புள்ளதாம். இந்த நேரத்தில் தான் கார்டிசோல் உள்ளிட்ட பிற ஹார்மோன்கள் நமது உடலில் அதிகரிக்கிறது. ஒரு நபர் அழுத்தத்தில் இருக்கும் போது ​​இந்த ஹார்மோன் அளவுகள் மாறுகிறது. இதுவே மாரடைப்பு அல்லது இதய பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த கண்டுபிடிப்பில் முக்கிய விஷயம் என்னவென்றால் திங்கட்கிழமைகளில் தான் கொடூரமான மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறதாம்.

என்ன காரணம்: இது குறித்து இதயநோய் வல்லுநர்கள் கூறுகையில், "திங்கள்கிழமை பொதுவாக அழுத்தம் அதிகமாக இருக்கும்.. மாரடைப்பு அதிகம் ஏற்பட இது முக்கிய காரணமாக இருக்கலாம். வேலை வாரம் திங்கள்கிழமை ஆரம்பிக்கும் நிலையில், அன்று மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவை அதிகரிக்கிறது. அதிக அழுத்தம் என்பது இதய நோய் மற்றும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் என்பது ஏற்கனவே பல ஆய்வுகளில் உறுதி செய்துள்ளது.

எனவே, வார இறுதி நாட்களில் ரிலாக்ஸ் ஆக இருந்து கொண்டு மீண்டும் திங்கள்கிழமை வேலைக்குத் திரும்பும் போது அழுத்தம் அதிகரிக்கிறது. இதுவே திங்கள் கிழமைகளில் மாரடைப்பு அதிகரிக்கக் காரணமாக இருக்கலாம். இதை நாம் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது கவனமாக இருக்க வேண்டும்" என்கிறார்கள்.

மற்ற காரணங்கள்: திங்கள்கிழமைகளில் மாரடைப்பு அதிகம் ஏற்பட வேறு என்ன காரணங்கள் உள்ளன எனப் பார்க்கலாம். முதலில் வீக் எண்ட் என்றால் நாம் நமது வழக்கமான பணிகளை விட்டுவிடுவோம். உணவுப் பழக்கம், தூங்கும் மற்றும் விழிக்கும் நேரம் என அனைத்தும் மாறும். மேலும், மது குடிப்பதும் வீக் எண்டில் தான் இருக்கும். இப்படி இரண்டு நாட்கள் முற்றிலுமாக வழக்கமான பணிகளை விட்டுவிட்டு இருக்கிறோம். மீண்டும் திங்கள்கிழமை மாற்றும் போது அதுவும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது.

அடுத்து மருத்துவமனைக்குத் தாமதமாகச் செல்வதும் ஒரு முக்கிய காரணம்.. வார இறுதியில் மாரடைப்பிற்கான அறிகுறிகள் தென்பட்டாலும் அதை பெரும்பாலான மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லையாம். வீக் எண்டில் மாரடைப்பிற்கான அறிகுறிகளான சோர்வு அல்லது மன அழுத்தம் ஏற்பட்டாலும் அவை மாரடைப்பின் அறிகுறி என்பதை அவர்கள் உணர மறுக்கிறார்கள். இவை திங்களன்று மேலும் சீரியஸாக மாறி உயிரிழப்பை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மருத்துவர்கள் அலர்ட்: இவை அனைத்தையும் தாண்டி மருத்துவர்கள் முக்கியமாகச் சொல்வது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைத் தான். பெரும்பாலோருக்கு திங்கள்கிழமை என்பதே பெரும் போராட்டமாகவே இருக்கும். அன்றைய தினம் வீட்டில் இருந்து கிளம்புவது முதல் மாலை வீடு திரும்புவது வரை அழுத்தம் உச்சத்தில் இருக்கும். இவையே திங்கள்களில் மாரடைப்பு அதிகம் ஏற்படக் காரணமாக இருக்கலாம்.

இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "ஏன் திங்கள்களில் மட்டும் மாரடைப்பு அதிகரிக்கிறது என்பது நமக்கு துல்லியமாகத் தெரியவில்லை. இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும், எந்த நாளாக இருந்தாலும் அறிகுறிகளைப் புறந்தள்ளாமல் ஆரோக்கியமாக இருந்தால் போதும். மேலும், அரசும் கூட இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கலாம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+