"அமெரிக்காவை அழிப்போம்.." உக்ரைன் போருக்கு நடுவே.. அணு ஆயுத ஏவுகணைகளை இறக்கும் ரஷ்யா! ஏன் முக்கியம்
மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் ஓராண்டிற்கு மேலாகப் போர் நடந்து வரும் நிலையில், ரஷ்ய ராணுவம் மிகப் பெரிய அணு ஆயுத போர்ப் பயிற்சியை நடத்தியுள்ளது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
உக்ரைன் நாட்டில் ஓராண்டிற்கு மேலாகப் போர் தொடர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த ஆண்டு பிப். மாதம் தொடங்கிய போர், இன்னுமே முடிவுக்கு வரவில்லை. இதனால் இரு நாடுகள் மட்டுமின்றி, உலகெங்கும் பாதிப்பு மோசமாகவே இருக்கிறது.
போரில் உக்ரைன் நாட்டிற்கு மேற்குலக நாடுகள் தொடர்ந்து ஆயுதங்களை அளித்து வருகிறது. இதனிடையே உக்ரைன் போர் ஓரு பக்கம் நடந்து கொண்டிருக்க மற்றொருபுறம் ரஷ்யா தொடர்ந்து அணு ஆயுதங்கள் குறித்து மிரட்டல் விடுத்து வருகிறது.

அணு ஆயுத சோதனை
பல வல்லுநர்களும் கூட ரஷ்யா மிகச் சிறியளவில் அணுஆயுத தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாகவே எச்சரித்துள்ளனர். இந்தச் சூழலில் ரஷ்ய ராணுவம் மிகப் பெரிய அணு ஆயுத சோதனையை நடத்தியுள்ளது. தனது அணு ஆயுத பலத்தைக் காட்டும் வகையில் அவர்கள் சைபீரியாவில் மொபைல் லாஞ்சர்களை நிலைநிறுத்தியுள்ளனர். உக்ரைனில் நடந்த சண்டையின் மத்தியில் நாட்டின் பெரிய அணுசக்தி திறனை வெளிப்படுத்தும் வகையில் ரஷ்ய இராணுவம் சைபீரியாவில் மொபைல் லாஞ்சர்களை நிலைநிறுத்தியதால் இந்த அறிவிப்பு வந்தது. இதன் ஒரு பகுதியாக வலிமையான யார்ஸ் மொபைல் ஏவுகணைகள் சைபீரியாவின் மூன்று பிராந்தியங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

யார்ஸ்
அதேநேரம் இங்கிருந்து ஏவுகணைகளை லான்ச் செய்து பயிற்சி மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து ரஷ்யா எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.. யார்ஸ் என்பது அணு ஆயுதங்களைத் தாக்கி செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணையால் இது சுமார் 11,000 கிலோமீட்டர்கள் (6,800 மைல்களுக்கு மேல்) தூரம் வரை செல்லமுடியும். ரஷ்யா பாதுகாப்புப் படையின் முதுகெலும்பாக்க இந்த ஏவுகணை தான் இருக்கிறது. சோதனைக் களத்திற்கு ஏவுகணைகளை ஏற்றிச் செல்லும் டிரக்குகள் குறித்த படங்களையும் ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கிழக்கு சைபீரியா
கிழக்கு சைபீரியாவில் சுமார் 300 வாகனங்கள் மற்றும் 3,000 வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவின் அண்டை நாடான பெலாரசில் குறிப்பிட்ட அளவுக்கு அணு ஆயுதங்களை நிலைநிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக புதின் அறிவித்த சில நாட்களில் இந்த மாபெரும் பயிற்சி நடந்துள்ளது. சிறியளவில் தாக்கும் அணு ஆயுதங்களைப் போரில் குறிப்பிட்ட அளவு பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் இருக்கவே செய்கிறது. முழு நகரங்களையும் அழிக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஆயுதங்களுடன் ஒப்பிடுகையில் ஒப்பிடுகையில் குறுகிய தூர ஆயுதங்கள் சேதத்தைக் குறைவாகவே ஏற்படுத்தும்.

என்ன சொல்ல வருகிறார்கள்
ரஷ்யாவைத் தீர்த்துக் கட்ட மேற்குலக நாடுகள் முயல்வதாகவும் இதைத் தடுக்க ரஷ்யா தனது அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்று புதின் தொடர்ந்து கூறி வருகிறார். இந்தச் சூழலில் தான் பெலாரஸில் அணு ஆயுதங்களை நிறுத்த புதின் முடிவு செய்திருந்தார். அணு ஆயுதங்களைப் பற்றித் திரும்ப திரும்ப பேசுவதன் மூலம் அதைப் பயன்படுத்த ரஷ்யா தயங்காது என்பதையே அவர் உலக நாடுகளுக்குத் தெரியப்படுத்துகிறார்.

எச்சரிக்கை
உக்ரைன் நாட்டிற்கு மேற்குலக நாடுகள் தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவது, நிலைமையை அணு ஆயுத மோதலுக்கு இழுத்துச் செல்வதாக ரஷ்யா எச்சரித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா தோல்வியடைய வேண்டும் என விரும்பும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் நிகோலாய் பட்ருஷேவ் வெளிப்படையாக எச்சரித்தார். பட்ருஷேவ் மேலும் கூறுகையில், "ரஷ்யா மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதலை நடத்தலாம் என்றும் அதற்கு ரஷ்யாவால் பதிலடி தர முடியாது என்றும் சில அமெரிக்க அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள்.. இது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். ரஷ்யா பொறுமையாக உள்ளது.

அமெரிக்காவை அழிப்போம்
எங்கள் ராணுவத்தை வைத்து நாங்கள் எந்தவொரு நாட்டையும் அச்சுறுத்த முயலவில்லை. இருப்பினும், எங்கள் நாட்டிற்கு ஆபத்து ஏற்பட்டால், அமெரிக்கா உட்பட எந்தவொரு எதிரியையும் அழிக்கும் திறன் கொண்ட தனித்துவமான நவீன ஆயுதங்கள் எங்களிடம் உள்ளது" என்றார். இதனிடையே இப்போது சைபீரியாவில் ரஷ்யா நடத்திய போர்ப் பயிற்சி குறித்து அது அமெரிக்காவிடம் முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை. இனிமேல் ரஷ்யா தனது ஏவுகணை சோதனைகள் குறித்து அமெரிக்காவிற்குத் தெரிவிக்காது என்று ரஷ்யா துணை பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் தெரிவித்துள்ளார்.

ஏன் முக்கியம்
இரு நாடுகளில் இருக்கும் அணு ஆயுதங்கள் குறித்த தகவல்களுடன், ஏவுகணை சோதனை குறித்த தகவல்களையும் இரு நாடுகளும் இதுவரை பரிமாறிக் கொண்டிருக்கின்றன. இது இரு நாடுகளுக்கும் இடையே தேவையில்லாமல் பதற்றம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இருந்தது. இப்போது இதுபோன்ற தகவல்களைப் பகிர மாட்டோம் என்று ரஷ்யா கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக புதிய ஸ்டார்ட் ஒப்பந்தத்தில் இருந்து கடந்த மாதம்தான் ரஷ்யா வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications