ரகசிய காதலியுடன் "தனிமை!" அதிபர் புதின் வாங்கிய சீக்ரெட் அரண்மனை! அடேங்கப்பா.. என்ன ஒரு பிரம்மாண்டம்
உக்ரைன் போரைத் தீவிரப்படுத்த புதின் உத்தரவிட்டுள்ள நிலையில், மறுபுறம் சொகுசு வாழ்க்கையில் மூழ்கியுள்ளார் புதின்.
மாஸ்கோ: ஒரு பக்கம் உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிபர் விளாடிமிர் புதின் அவரது ரகசிய காதலியுடன் பாதுகாப்பாக இருக்க அதிக பாதுகாப்பு வாய்ந்த ஆடம்பரமான சீக்ரெட் பங்களா வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்து ஓராண்டைத் தாண்டிவிட்டது. இந்தப் போர் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை. அதிலும் குறிப்பாக சமீபத்திய நாட்களில் உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் அதிகரித்தே வருகிறது.
இது போர் இல்லை தங்கள் நாட்டை காக்க எடுக்கப்படும் சிறப்புப் போர் நடவடிக்கை என்றே ரஷ்ய கொடுத்து வருகின்றனர். இருப்பினும், உலகின் பெரும்பாலான நாடுகள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போராகவே இதைப் பார்க்கின்றனர்.

உக்ரைன் போர்
கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிப் போர் ஓராண்டைக் கடந்து தொடர்ந்து வருகிறது. உலகின் வலிமையான ராணுவங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட ரஷ்யாவுக்கு, இது தர்மசங்கடத்தையே ஏற்படுத்தியுள்ளது. இந்த உக்ரைன் போர் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும் மிகக் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளன. உக்ரைன் மீதான போரால் சூரிய காந்தி எண்ணெய் உட்பட பல்வேறு உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளன. இந்தப் போருக்கு ரஷ்ய அதிபர் புதின் மட்டுமே காரணம் என்று பலரும் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

அரண்மனை போன்ற வீடு
மேலும், ரஷ்யா மற்றும் புதின் மீது முன்பு வரலாற்றில் இல்லாத அளவுக்குப் பொருளாதாரத் தடைகளும் விதித்துள்ளன. இதனால் உக்ரைன் ரஷ்யா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளும் அவதிப்பட்டு வருகிறது. இருப்பினும், இதுவெல்லாம் புதினுக்கு எந்தவொரு பிரச்சினையும் தருவதாகத் தெரியவில்லை. ஒரு பக்கம் உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிபர் விளாடிமிர் புதின் அவரது ரகசிய காதலியுடன் பாதுகாப்பாக இருக்க அதிக பாதுகாப்பு வாய்ந்த ஆடம்பரமான சீக்ரெட் அரண்மனை போன்ற வீட்டை வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

யார் இந்த ரகசிய காதலி
இது குறித்த தகவல்களை Proekt வெளியிட்டுள்ளது. ரஷ்யாவில் இருக்கும் வால்டாய் என்ற பகுதியில் இருக்கும் வனத்தில் அவர் இந்த அரண்மனை போன்ற வீட்டை வாங்கியுள்ளார். அவர் இதைத் தனது நீண்ட கால சீக்ரெட் காதலியான 39 வயதான அலினா கபீவாவுக்காக வாங்கியுள்ளார். இங்கு தான் புதின் இப்போது அவரது காதலி அலினா மற்றும் அவர்களின் குழந்தைகள் வசித்து வருகிறார்கள். முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக அலினாவுக்கு ஏற்கனவே செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தனியாக ஒரு பெரிய வீடு இருக்கிறது.

பிரம்மாண்டம்
இந்தச் சூழலில் தான் அதற்கு அருகிலேயே இந்த பெரிய அரண்மனை போன்ற வீட்டை வாங்கியுள்ளனர். இது கடந்த 1996இல் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. வீட்டைத் தவிரப் பலத்த பாதுகாப்பில் 25 மீட்டர் நீச்சல் குளம், மண் அறை, மசாஜ் அறை, குளியல் அறை என்று அனைத்திற்கும் தனித்தனியாக அறைகள் உள்ளன. இந்த இடத்தில் தான் அதிபர் தனது காதலியுடன் அரச குடும்பத்தாரைப் போல் வாழ்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் பல ரூம்களுடன் இது பிரம்மாண்டமாக அமைகிறது.

குழந்தைகள்
மேலும், விரும்பும் போது அவரை ஏரிக்கரைக்கு அழைத்துச் செல்ல முழு பாதுகாப்பை அம்சங்களைக் கொண்ட தனி ரயிலும் அங்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. புதின் 2000களில் இருந்தே தனது காதலியுடன் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இவர்களுக்குக் குறைந்தது மூன்று குழந்தைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் தனது முதல் மனைவியான லியுட்மிலா ஓச்செரெட்னாயாவை 2013இல் தான் விவாகரத்து செய்தார். இருப்பினும், அதற்கு முன்பே பல ஆண்டுகளாக அவர் காதலி அலினாவுடனேயே வாழ்ந்து வருகிறார்.

தீவிர தாக்குதல்
உக்ரைன் நாட்டில் இப்போது போரை ரஷ்ய ராணுவம் தங்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. சில நாட்களில் மட்டும் தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது. உக்ரைன் முழுவதும் 80க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை கொண்டு ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டனர். மேலும், இதனால் பல லட்சம் உக்ரைன் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். போர் முனை இப்படி இருக்கத் தான், புதின் இந்த சொகுசு அரண்மனையை வாங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications