நெருங்கும் சவுதி-ஈரான்.. சீனா செய்த காரியம்! அடடே இஸ்ரேலுக்கு பெரிய சிக்கல் ஆச்சே.. ஏன் தெரியுமா
ஜெருசலேம்: சவுதிக்கும் ஈரான் நாட்டிற்கும் இடையே கடந்த சில மாதம் மிக முக்கிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இது இஸ்ரேல் நாட்டிற்குப் பெரிய தலைவலியை ஏற்படுத்தப் போகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியும் ஒருங்கிணைப்பும் திரும்புவது அந்த நாடுகளுக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த உலகிற்கும் நல்லது. கச்சா எண்ணெய் பெரும்பாலும் அங்கிருந்தே வருவதால் அங்கே நிலவும் ஒற்றுமை ரொம்பவே அத்தியாவசியமாகிறது.

முக்கிய ஒப்பந்தம்: இதனிடையே இப்போது சவுதிக்கும் ஈரான் நாட்டிற்கும் இடையே உறவுகளைப் புதுப்பிக்க ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுள்ளன. இது இரு நாடுகளுக்கு மட்டுமின்றி, நிச்சயம் ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் நன்மை பயக்கும்..
அதேநேரம் சவுதியும் ஈரானும் இணைவது இஸ்ரேலுக்குப் பிரச்சினையாக மாறும். இஸ்ரேலுக்கு இது ஒரு உள்நாட்டு விவகாரம் அளவுக்கு முக்கியமானது. இஸ்ரேல் நாட்டில் அனைவரும் இந்த ஒப்பந்தத்தின் பின்விளைவுகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தனர்.. இது ஈரானைத் தனிமைப்படுத்த இஸ்ரேல் எடுத்த முயற்சியை முடிவுக்குக் கொண்டுவருகிறது; நெதன்யாகு இஸ்ரேல் பிரதமராக பதவியேற்ற போது ஈரானை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
உள்ளே வரும் சீனா: இருப்பினும், சில காலமாகச் சீனாவின் மத்தியஸ்தம் மூலம் நிலத்தை மாறி வருகிறது. அதாவது ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் உருவாக்க முயன்ற கூட்டணி வலுவிழந்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பு அடிப்படையில் அங்கே ஒரு பிராந்திய கட்டமைப்பை உருவாக்க முயன்று வருகிறது. இருப்பினும், கடைசி வரை அவர்களால் சவுதியை இஸ்ரேலுடன் அமைதியான உறவை ஏற்படுத்த ஒப்புக் கொள்ள வைக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஐநா மாநாட்டிற்கு அழைக்கப்பட்ட இஸ்ரேலிய பிரதிநிதிகளுக்குச் சவுதி விசா மறுக்கும் அளவுக்கு இந்த மோதல் சென்றது.
சீனா நிலைப்பாடு: சீனா தன்னை இஸ்ரேலுக்கு எதிரானதாக ஒருபோதும் காட்டிக் கொண்டது இல்லை. அதேநேரம் சீனா எப்போதும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது. அதையே தான் இந்த சவூதி-ஈரான் ஒப்பந்தம் இஸ்ரேலுக்கு நினைவூட்டுகிறது.
ஈரானின் அணுசக்தி கொள்கையைக் கண்டித்ததால் ஈரான் கோபமடைந்த நிலையில், அதை அமைதிப்படுத்தும் சீன முயற்சி தான் இது என்கிறது இஸ்ரேல். அதாவது அரபு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் நடுநிலையில் இருக்கவே சீனா முயல்கிறது. இது இப்போது அவர்களுக்குப் பயன் தந்தாலும், எத்தனை காலம் சீனாவால் இந்த நிலையில் தொடர முடியும் என்பது பெரிய கேள்வியாகவே இருக்கிறது.
அடுத்து என்ன: இந்த மாற்றங்கள் இஸ்ரேலுக்கு தான் தலைவலியைத் தருகிறது. அங்கே ஏற்கனவே, வலுவான அரசு இல்லாதது உள்ளிட்ட குழப்பங்கள் நிலவி வருகிறது. இஸ்ரேலில் குழப்பம் இருக்கிறது என்ற இமேஜ் வலுவாக உருவானால், அது சீனாவை இஸ்ரேல் எதிரி நாடுகளுக்குத் தரும் ஆதரவை அதிகரிக்க ஊக்குவிக்கும் என்பதை இஸ்ரேல் உணர வேண்டும்.
மறுபுறம் ஈரான் தனது இமேஜை வேறு மாதிரி காட்டி வருகிறது. சீன-ஈரான் நாடுகளுக்கு இடையே ஒரு உச்சி மாநாடு நடந்தது. அதன் பிறகு, ஈரான் திடீரென உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவுவதாக அறிவித்து டிரோன்களை வழங்கியது
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் பகை இருப்பது தெரியும். இதனால் ஈரான் தெளிவாக மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராகி வருகிறது. ஆனால், இஸ்ரேலில் நிலவும் உள்நாட்டுக் குழப்பம் என்பது அவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. ஈரானை தனிமைப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்த நிலையில், இஸ்ரேலுக்கு வரும் காலத்தில் பெரிய சிக்கல் காத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications