200 வருட பாரம்பரியம் இப்போ காலி.. நேட்டோவில் ஐக்கியமான சுவீடன்.. பதறும் புதின்! ஓ இதுதான் மேட்டரா
ஸ்டாக்ஹோம்: சமீப காலமாக ரஷ்யாவின் நடவடிக்கைகள் உலக நாடுகளை அலறச் செய்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடான சுவீடன் இப்போது நேட்டோ அமைப்பில் இணைந்துள்ளது.
ரஷ்யா கடந்த 2022இல் யாருமே எதிர்பார்க்காத வகையில் உக்ரைன் மீது போரை ஆரம்பித்தது. புதின் இதுபோல திடீரென ஒரு போரை ஆரம்பிப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இது உலக நாடுகளைக் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளைப் பதற்றத்தில் தள்ளியது.

எங்கு வரும் காலத்தில் தங்கள் மீதும் ரஷ்யா இதேபோல ஆரம்பிக்குமோ என்பது ஐரோப்பிய நாடுகளின் அச்சம். இதனால் பல ஐரோப்பிய நாடுகள் தங்களைப் பார்த்துக் கொள்ள நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தன.
சுவீடன்: அதன்படி ஐரோப்பாவில் அமைந்துள்ள முக்கிய நாடான சுவீடன் நேட்டோ அமைப்பில் இணைய விண்ணப்பித்தது. ஒரு நாடு விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகளுக்குக் காத்திருப்புக்குப் பிறகு நேட்டோவில் இணைய முடியும். இப்போது அந்த இரண்டு ஆண்டுக் காலம் முடிந்துவிட்ட நிலையில், இந்த நேட்டோ அமைப்பில் இப்போது அதிகாரப்பூர்வமாகச் சுவீடன் இணைந்துள்ளது. இதன் மூலம் சுவீடன் 32ஆவது நாடாக நேட்டோ அமைப்பில் இணைந்துள்ளது.
"இனி வாலாட்டினால்.." சீனாவுக்கு எதிராக சாட்டையை சுழற்றிய பைடன்.. இந்தியா குறித்தும் பரபர கருத்து
2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா யாருமே எதிர்பார்க்காத வகையில் போரை ஆரம்பித்த நிலையில், இது பல ஐரோப்பிய நாடுகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. எங்கு தங்கள் மீதும் ரஷ்யா இதேபோல தாக்குதலை நடத்துமோ என ஐரோப்பிய நாடுகள் அஞ்சின. இதன் காரணமாகவே சுவீடன் நேட்டோ அமைப்பில் இணைய முடிவு செய்தது.
முடிவுக்கு வந்த நடுநிலை: ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டமும் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பற்றி எரிந்த போதும் சுவீடன் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்திருந்தது. இரண்டாம் உலகப் போருக்கு முன்பே, சுமார் 200 ஆண்டுகளாக நடுநிலையான நிலைப்பாட்டையே சுவீடன் எடுத்து இருந்த நிலையில், இப்போது நேட்டோவில் இணைந்துள்ளது. இதன் மூலம் சுவீடனின் 200 வருட நடுநிலை முடிவுக்கு வந்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், "இது சுவீடனுக்கு மட்டுமின்றி.. நேட்டோ அமைப்பிற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு.. எங்கள் நேட்டோ கூட்டமைப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் வலிமையானதாக மாறி இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
நேட்டோ: North Atlantic Treaty Organization என்பதே நேட்டோவாகும். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தான் வலிமையான நாடுகளாக உருவெடுத்தது. அமெரிக்கா முதலாளித்துவ பாதையில் தொடர்ந்து பயணித்த நிலையில், சோவியத் ஒன்றியம் கம்யூனிசத்தை தேர்ந்தெடுத்தது. இருப்பினும், சோவியத் ஒன்றியம் எங்கே தனது கம்யூனிச கொள்கைகளை அண்டை நாடுகளுக்கும் பரப்பி அவற்றை ஆக்கிரமிக்குமோ என அஞ்சிய அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகள் நேட்டோ அமைப்பை ஆரம்பித்தன.
தொடக்கத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் ஆகிய 12 நாடுகள் மட்டுமே இந்த அமைப்பில் இருந்தன. அதன் பிறகு மெல்லப் பல நாடுகளும் நெட்டோ அமைப்பில் இணையவே மொத்த உறுப்பு நாடுகள் 31ஆக உயர்ந்தது. இந்தச் சூழலில் தான் 32ஆவது நாடாகச் சுவீடன் இந்த நேட்டோ அமைப்பில் இணைந்துள்ளது.
நேட்டோ ஒப்பந்தப்படி ஒரு உறுப்பு நாட்டை வேறு எதாவது நாடு தாக்கினால், மற்ற நாடுகள் வந்து உதவும்.. அதாவது இப்போது சுவீடனை ரஷ்யா தாக்குகிறது என வைத்துக் கொள்வோம். அப்போது அமெரிக்கா உட்பட அனைத்து நேட்டோ நாடுகளும் உதவும். இதன் காரணமாகவே இது சர்வதேச அளவில் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications