அல்வா மாதிரி வந்த சான்ஸை.. தூக்கி வீசிய வீரர்! எத்தனை பேர் இருக்காங்க? பிசிசிஐ சாட்டையை சுழற்றணும்!

Subscribe to Oneindia Tamil

கேப் டவுன்: நியூசிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் சொதப்பிய மிடில் ஆர்டர் வீரர் ஒருவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

நியூசிலாந்துக்கு எதிரான டி 20 தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இந்த தொடரில் முதல் போட்டி மழை காரணமாக ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி எளிதாக வென்றது.

இதையடுத்து நடந்த மூன்றாவது போட்டி மழை காரணமாக டிரா ஆனது. இந்த நிலையில் தற்போது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. இதில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஆடும் லெவன்

ஆடும் லெவன்

இன்று ஆடும் இந்திய அணியில் ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், ரிஷப் பந்த் (வி.கே), ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்திய அணியில் உம்ரான் மாலிக் ஒரு வழியாக அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். அதேபோல் இந்திய அணியில் சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தது. ரசிகர்களின் கோரிக்கைக்கு பின் ஒருவழியாக ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

இதையடுத்து இன்று இறங்கிய அணியில் தவான் சிறப்பாக பேட்டிங் செய்தார். ஓப்பனிங் இறங்கிய அவர் 77 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். நிதானமாக ஆடினாலும் தவான் 13 பவுண்டரிகளை அடித்தார். இன்னொரு பக்கம் சுப்மான் கில் 65 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அதன்பின் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் நிதானமாக ஆடி அரை சதம் அடித்தார். ஆனால் பண்ட் இன்றும் மோசமாக சொதப்பினார். 23 பந்துகள் பிடித்த அவர் வெறும் 15 ரன்கள் மட்டும் எடுத்தார். போல்ட் ஆகி அவுட்டாகி சென்றார்.

தொடர் வாய்ப்பு

தொடர் வாய்ப்பு

டெஸ்ட் போட்டிகளில் நன்றாக ஆடும் பண்ட் தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் சொதப்பி வருகிறார். 2019 உலகக் கோப்பை தொடரில் இருந்தே பண்ட் தொடர் வாய்ப்புகளை பெற்று வருகிறார். சஞ்சு சாம்சன் இடத்தில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பண்ட் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மோசமாக சொதப்பி வருகிறார். இன்றைய பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. ஆனாலும் இந்திய வீரரக்ள் விக்கெட் இழக்க கூடாது என்று நிதானமாக ஆடினார்கள்.

நிதானம்

நிதானம்

அப்படி நிதானமாக ஆடியும் கூட பண்ட் மோசமாக சொதப்பி விக்கெட்டை பறிகொடுத்து உள்ளார். அதிலும் கடந்த 10க்கும் ஒருநாள் மேற்பட்ட போட்டிகளில் பண்ட் அடித்த ரன்கள் கடும் அதிர்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது.
15
11
6
6
3
27
20*
17
14
44
33*
24
14

இதுதான் கடைசியாக பண்ட் அடித்த ரன்கள். அந்த அளவிற்கு மோசமான ஆவரேஜ் இவர் வைத்து இருக்கிறார். ஆனாலும் இவருக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்திய அணியில் பல திறமையாக கீப்பர்கள் இருக்கிறார்கள். இன்னும் பல ஆல் ரவுண்டர்கள் இருக்கிறார்கள்.

வாய்ப்பு

வாய்ப்பு

ஆனாலும் பண்டிற்குத்தான் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஐபிஎல் போட்டிகளிலும் கூட கடந்த 2 சீசனாக இவர் சரியாக ஆடவில்லை. கடந்த 2 சீஸனும் இவர் மோசமாக சொதப்பினார். ஆனாலும் இவருக்கு இந்திய அணியில் எந்த அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இஷான் கிஷான், ஷாபாஸ் அகமது போன்ற வீரர்கள் இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள். சரியாக கீப்பிங்கும் செய்யாமல் திணறும் பண்டிற்கு பிசிசிஐ தேவைக்கு அதிகமாக வாய்ப்பு வாங்கிவிட்டது. இந்திய அணியின் கம்ரான் அக்மல் போல உருவெடுத்துக்கொண்டு இருக்கும் பண்டை சில தொடர்களில் ஓரம் கட்டினால் மட்டுமே இந்திய அணிக்கு விடிவ காலம் பிறக்கும். ஆனால் பிசிசிஐ சாட்டையை சுழற்றுமா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+