உலக அரசியலே மாறப்போகிறது.. எண்ணெய் நாடுகளை அள்ளிப்போட்ட "பிரிக்ஸ்".. இந்தியாவால் அமெரிக்கா அதிர்ச்சி
ஜோஹன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் மாநாடு காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்து உள்ளன.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை கொண்ட வலுவான கூட்டமைப்புதான் பிரிக்ஸ். இந்த பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு வருடா வருடம் நடப்பது வழக்கம். கடந்த 3 வருடங்களாக ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட கூட்டம் இந்த முறை நேரடியாக தென்னாப்பிரிக்காவில் நடத்தப்படுகிறது.

இந்த BRICS சந்திப்பு ஒரு முக்கியமான புவிசார் அரசியல் காலகட்டத்தில் நடக்கிறது. ரஷ்ய உக்ரைன் போர், ரஷ்ய - அமெரிக்க மோதல், சீனா - அமெரிக்கா மோதலுக்கு இடையே இந்த போர் நடக்கிறது. 2019 COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு நேரில் நடக்கும் முதல் உச்சிமாநாடு ஆகும் இது.
இதுவரை வீடியோ மூலம் நடந்தது 3 ஆண்டுகளுக்கு பின் நேரடியாக நடக்கிறது. முக்கியமாக மேற்கு உலக நாடுகளான அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு எதிராக பல்வேறு முக்கியமான விஷயங்கள் இதில் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளன. தென்னாபிரிக்காவின் புதிய அதிபர் டி சில்வா அமெரிக்கா எதிர்ப்பு மனப்பான்மையில் இருப்பதால் இந்த பிரிக்ஸ் கூட்டம் கிட்டத்தட்ட இந்தியா தவிர்த்து மற்ற நாடுகள் எல்லாமே அமெரிக்கா எதிர்ப்பு மனப்பான்மை கொண்ட நாடுகளின் கூட்டமாகவே பார்க்கப்படுகிறது.
இணைந்த 6 நாடுகள்:இந்த கூட்டத்தில், பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகளை சேர்த்துக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அர்ஜென்டினா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை இந்த கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ள உள்ளது.
தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபர் சிரில் ராமபோசா இன்று பிரிக்ஸ் கூட்டத்திற்கு பின் உரையாற்றினார். இன்று நடந்த உச்சிமாநாட்டின் முடிவுகளை அறிவிக்கும் போது புதிய உறுப்பினர் நாடுகளின் பெயர்களை அறிவித்தார்.
பிரிக்ஸ் நாடுகளின் பலத்தை அதிகரிக்கும் விதமாகவும், கூட்டமைப்பை பெரிதாக்கும் விதமாகவும் இந்த உறுப்பினர் சேர்க்கை நடந்து உள்ளது. பிரிக்ஸ் நாடுகள்தான் ஏற்கனவே உலகின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக ரஷ்யா, சீனா, இந்தியா ஆகியவைதான் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியா மாறும்: எண்ணெய் வள நாடுகள் இந்த குழுவில் இணைவது பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு. உதவும் அதேபோல் பாகிஸ்தான் இதில் சேர்த்துக்கொள்ளப்படாது என்று எடுக்கப்பட்ட முடிவும் இந்தியாவிற்கு சாதகமாக மாறி உள்ளது.
தற்போது எண்ணெய் வளம் நிரம்பிய நாடுகளை பிரிக்ஸ் கூட்டமைப்பு தங்கள் குழுவில் சேர்த்து உள்ளது. இதன் மூலம் உலகின் ஒன்பது பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஆறு நாடுகள் பிரிக்ஸ் குழுவில் அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும். இதன் மூலம் உலகின் எண்ணெய் வளத்தை பிரிக்ஸ் நாடுகள் கட்டுப்படுத்த முடியும். இந்தியாவிற்கும் இது சாதகமாக முடியும்.
கரன்சி: இதில் பிரிக்ஸ் கரன்சி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும் ஆலோசனை செய்யப்பட்டது. பிரிக்ஸ் நாடுகள் எல்லாம் இனி பிரிக்ஸ் குழுவின் புதிய கரன்சியை பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டியது எண்ணெய் வள நாடுகள் இப்போது டாலரை பயன்படுத்துகின்றன. பிரிக்ஸ் கரன்சி குழுவில் அவை சேருவதால் அவையும் டாலரை துறந்துவிட்டு பிரிக்ஸ் கரன்சிக்கு மாறும். இது அமெரிக்க டாலரின் வீழ்ச்சியாக பார்க்கப்படும்.
இதனால் உலக அரசியலே மாறும். எண்ணெய் பொருட்கள் டாலருக்கு பதிலாக பிரிக்ஸ் கரன்சியில் வாங்கப்படும். முக்கியமாக சீனா, ரஷ்யாவிற்கு எழுச்சியை இது கொடுக்கும் என்பதால் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா அதிர்ச்சியில் உறைந்து உள்ளன. இந்த கூட்டமைப்பில் பாகிஸ்தானை சேர்க்க சீனா அழுத்தம் கொடுத்தது.
எண்ணெய் வள ரீதியாக பிரிக்ஸ் நாடுகள் உலக நாடுகளை கட்டுப்படுத்துவதோடு பொருளாதார ரீதியாகவும் உலக நாடுகளை பிரிக்ஸ் நாடுகள் இனி கட்டுப்படுத்தும். முக்கியமாக பிரிக்ஸ் நாடுகளின் இந்த முடிவு மேற்கு உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அமெரிக்கா அதிர்ச்சி: இதில் தொடக்கத்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பை விரிவாக்குவதையே இந்தியா எதிர்த்தது. ஆனால் அதன்பின் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. கூடுதல் நாடுகள் இருக்கும் பட்சத்தில் இந்தியாவிற்கு அது வலிமை சேர்க்கும் என்பதால் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இந்த நிலைப்பாடு காரணமாக அமெரிக்காவும் அதிர்ச்சியில் உள்ளது.












Click it and Unblock the Notifications