ஜாலியாக இருக்கும்போதும் சுத்தம்.. தொட்டாலே சுத்தம்.. மனைவியால் நொந்து, கோர்ட்டுக்கு ஓடிய கணவன்

Subscribe to Oneindia Tamil

அங்காரா: வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது நல்ல விஷயம்தான்.. வீட்டை தினமும் பெருக்கி, துடைத்து, பொருட்களை எல்லாம் சுத்தமாக வைத்திருப்பது யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால் அந்த சுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, வீட்டில் இருக்கும் கணவனுக்கே எதையும் செய்ய முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது? அப்படித்தான் ஒரு கணவர், தன்னுடைய மனைவியிடம் சிக்கி படாதபாடு பட்டு விட்டார்.. கடைசியில் நீதிபதியிடம் முறையிட கோர்ட்டுக்கே ஓடிவிட்டாராம்.. என்ன நடந்தது?

துருக்கியை சேர்ந்தவர்கள் அந்த இளம் தம்பதியினர்.. திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.. மனைவிக்கு வீடு, வாசல் அனைத்தும் சுத்தமாக இருப்பதுதான் பிடிக்கும்.. ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த மனைவியின் சுத்தம் பார்க்கும் பழக்கம், நாளடைவில் குடும்ப வாழ்க்கையையே பாதிக்கும் அளவுக்கு அதிகமாகிவிட்டதாம்.

Wife Cleanliness Court Case Marriage

துருக்கி தம்பதி

வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் சுத்தம் முக்கியம் என்ற நிலைமை வந்துள்ளது.. உதாரணத்துக்கு, மனைவி கழிவறையை சுத்தம் செய்துவிட்டால், அதை உடனடியாக கணவர் பயன்படுத்தக்கூடாதாம். சுத்தம் செய்த உடனேயே கழிவறையை பயன்படுத்தக் கூடாது என்று மனைவி கண்டிஷன் போட்டுள்ளார்..

இதுதான் அந்த கணவனுக்கு எரிச்சலை தந்துள்ளது.. இயற்கை உபாதையைக்கூட சிரமப்பட்டு சமாளிக்க வேண்டிய நிலைமை உள்ளதே என்று வேதனைப்பட்டுள்ளார்.

வீட்டில் ஒரு சாதாரண விஷயத்தை செய்வதற்குக்கூட, சுத்தமாக இருக்கிறதா? என்ற கேள்விதான் முதலில் கேட்பாராம் மனைவி.. வீட்டில் சமைப்பதும் அடுத்த பிரச்சனையாக மாறியிருக்கிறது. சமைத்தால் கிச்சன் அழுக்காகிவிடும் என்பதால், வீட்டிலேயே சமைப்பதையே தவிர்த்துவிடுவாராம் அந்த மனைவி.. இதனால் வெளியிலிருந்து சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிடுவதுதான் வழக்கமாக இருந்து வந்துள்ளது..

படுக்கையறை தகராறு

இந்த விவகாரம் படுக்கையறை வரை நீண்டுள்ளது.. படுக்கையில் கணவரின் தலைமுடி ஒன்று அல்லது சில உதிர்ந்து விழுந்தால்கூட மனைவி கோபப்படுவாராம். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது..

இதைவிட ஹைலைட், கணவன்-மனைவி ஜாலியாக இருக்கும் நேரத்தில்கூட சுத்தம் தொடர்பான அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருந்ததாம்.. அந்தரங்க வாழ்க்கையிலும் இந்த சுத்தம் பற்றிய பிரச்சனை தலைதூக்கியதால், கணவர் நொந்து போய்விட்டார்..

மன உளைச்சல் - நஷ்ட ஈடு

இப்போது கோர்ட் படியேறியிருக்கிறார். திருமணமானது முதல் தான் பட்ட வேதனை, வலியை தன்னுடைய புகார் மனுவில் ஒன்றுவிடாமல் பதிவு செய்துள்ளார்..

இந்த திருமண வாழ்க்கையால் தனக்கு தொடர்ந்து மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், 4 ஆண்டுகளாக இருந்த திருமண உறவை இனிமேல் தொடர முடியாது என்ற முடிவுக்கு வந்ததால்தான், இப்போது விவாகரத்து கோரி கோர்ட்டை நாடியதாகவும், இந்த விவாகரத்துடன் சேர்த்து மொத்தம் 2.5 லட்சம் அமெரிக்க டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.40 கோடி இழப்பீடும் தேவை என்றும் அந்த மனுவில் கேட்டுள்ளார்.

வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், அந்த சுத்தமே வீட்டில் இருக்கும் கணவன்-மனைவிக்குள் பிரச்சனையாகி, கடைசியில் கோர்ட்டு வரை கொண்டு சென்றிருப்பதுதான் இந்த சம்பவத்தின் ஸ்பெஷாலிட்டியாகும்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+