என் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. டைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி!
கணவனின் அதிக அன்பு காரணமாக விவாகரத்து கேட்டுள்ளார் மனைவி
Recommended Video
புஜைரா: புருஷன் சரியில்லை, டைவர்ஸ் குடுங்க என்று சொன்னால்கூட பரவாயில்லை.. ரொம்ப சரியாக இருக்கிறார், ஒரு சண்டையும் இல்லை.. சச்சரவும் இல்லை.. அதனால் டைவர்ஸ் குடுங்க என்று கேட்டு கோர்ட்டையே அதிர வைத்துள்ளார் பெண் ஒருவர்.
வரதட்சணை கொடுமை, கள்ளக்காதல் கொடூரங்கள் தாங்க முடியாமல் எத்தனையோ பெண்கள்விவாகரத்து கேட்டு கோர்ட் வாசலை மிதித்துள்ளனர். ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெண் படு வித்தியாசமாக இருக்கிறார்.

புஜைரா நகரைச் சேர்ந்த பெண் இவர்.. டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போயுள்ளார். ஏன் விவாகரத்து செய்யறீங்க என்று கோர்ட்டில் வக்கீல் கேட்கவும், லிஸ்ட் போட்டு சொன்னார்.. குறைகளை இல்லை. நிறைகளை!
"எங்களுக்கு கல்யாணமாகி ஒரு வருஷம் ஆகிறது. என்னை என் கணவர் ஒரு குழந்தை போல பார்த்துக்கறார். இதுவரைக்கும் ஒருநாள் கூட என்கிட்ட சண்டை போடவே இல்லை.
எப்பவுமே அன்பா இருக்கிறார். எப்பவுமே என்னை லவ் பண்ணிட்டே இருக்கிறார். அளவுக்கு அதிகமாக பாசத்தை காட்டுவது எனக்கு நரகமாக இருக்கு. என்னை எதுவுமே திட்றதும் இல்லை. இது குறைஞ்சிடும்ன்னு பார்த்தால், தினமும் கூட்டிட்டேதான் போகுது. எப்படியோ சண்டை வரணும்னு, நானும் நிறைய ஐடியா பண்ணினேன். வீட்டை சுத்தம் செய்யாமல் இருந்தேன். ஆனா அதை பத்தி கூட என்கிட்ட கேட்கிறது இல்லை. அவரே உதவி பண்ணிடறார்.
அவர் குண்டாக இருப்பார். அதனால் அதை வைத்து கிண்டல் செய்தேன். ஆனால் அவரோ எக்சர்ஸைஸ் பண்ணி உடம்பை குறைச்சிட்டார். வெளியில எங்க போனாலும் எனக்கு மறக்காம கிஃப்ட் வாங்கி தந்துடறார். ஒருநாளாவது சண்டை போடுவார், போடுவார்னு எதிர்பார்க்கறேன்.. ம்ஹும்.. ஒரு சண்டையும் காணோம். இப்படி எனக்கு கட்டுப்பட்டு நடக்கும் புருஷன் எனக்கு தேவை இல்லை. அதனால எனக்கு விவாகரத்து வேண்டும்" என்றார்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நீதிபதியோ, வழக்கு ஒத்தி வைத்துவிட்டு கிளம்பிவிட்டார். மீண்டும் இந்த வழக்கு நடக்கும்போது, அந்த பெண்ணின் கணவன் "என் மனைவி கிட்ட இருந்து என்னை பிரிச்சிடாதீங்க.. அன்பான கணவனாகவே நான் இருக்க ஆசைப்படுகிறேன்?" என்றார். ஆனால் நீதிபதியோ, "முதல்ல ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்க" என்று சொல்லி வழக்கு ஒத்தி வைத்தார்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications