யார் அந்த மரியம் ஷரீப்?... ஏன் எல்லோரும் மோடி பதவியேற்பு விழாவுக்கு அவரை எதிர்பார்க்கிறார்கள்?
இஸ்லாமாபாத்: மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப்பை விட மரியம் ஷெரீப் என்பவரின் வருகைதான் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது. இந்த மரியம் ஷெரீப், நவாஸின் மகள் ஆவார். ஆனால் அவர் பதவியேற்புக்கு வரவில்லையாம்.
மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று நவாஸ் ஷரீப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள திங்கட்கிழமை காலை டெல்லிக்கு வருகிறார். அவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதோடு மட்டும் அல்லாமல் வரும் செவ்வாய்க்கிழமை இருநாட்டு உறவுகள் குறித்து மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இந்நிலையில் ஷரீபின் முடிவை அவரது மகளும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகியுமான மரியம் நவாஸ் ஷரீப் பாராட்டியுள்ளார். இதையடுத்து மரியம் ஷெரீப் குறித்து டிவிட்டரிலும், பேஸ் புக் பக்கங்களிலும் செய்திகள் நிரம்பி வழியத் தொடங்கின. இதற்குக் காரணம், மரியம் டிவிட்டரில் எழுதிய எழுத்துக்கள்தான். இரு நாட்டு மக்களையும் மிகவும் கவர்ந்துள்ளது மரியத்தின் டிவிட்.
இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து மரியம் ட்விட்டரில் கூறுகையில்,
இந்தியாவும், பாகிஸ்தானும் ஏன் பழையவற்றை நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும்? பழைய பகையை மறந்து உறவை புதிதாக துவங்க வேண்டும். இரண்டு நாடுகளும் ஏன் பிரிக்கப்பட்ட கொரியாவை போன்று இருக்க வேண்டும். மாறாக அவர்கள் ஏன் இணைக்கப்பட்ட ஐரோப்பா போன்று இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்படும் என்று மரியம் நம்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஷரீபுடன் தற்போது மரியம் இந்தியாவுக்கு வரவில்லையாம். அதை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது. ஒருவேளை பாகிஸ்தான் ராணுவம், மரியத்தின் பேச்சையும், எழுத்தையும் ரசிக்காது என்ற காரணத்தால், மோடி பதவியேற்பு விழாவின்போது மரியத்தால் பாகிஸ்தானில் புது சர்ச்சை கிளம்பி விடக் கூடாது என்பதற்காக ஷரீப் அவரைக் கூட்டி வர விரும்பவில்லை என்று பேசிக் கொள்கிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications