செம டைட்டான ஜீன்ஸ்... காலில் 2 நரம்புகள் பாதிப்பு... நடக்க முடியாமல் சரிந்து விழுந்த ஆஸி. பெண்!
அடிலைட்: ஆஸ்திரேலியாவில் மிகவும் டைட்டான ஜீன்சை அணிந்திருந்ததால், காலில் இரண்டு நரம்புகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பேஷன் பிரியை ஒருவர்.
ஆஸ்திரேலியாவின் அடிலைடைச் சேர்ந்த 35 வயதுப் பெண் ஒருவர் பேஷன் பிரியையாம். விதவிதமான ஆடைகள் அணிவதில் விருப்பம் கொண்ட அப்பெண், சம்பவத்தன்று மிகவும் டைட்டான ஜீன்ஸ் ஒன்றை அணிந்துள்ளார்.

நாள் முழுவதும் தனது காலில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தாலும், அதை சீரியசாக எடுத்துக் கொள்ளாமல் அசட்டையாக இருந்துள்ளார் அவர். மாலை நேரத்தில் அருகில் இருந்த பூங்கா ஒன்றில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது அவரது கால் பலமில்லாதது போல் இருந்துள்ளது. திடீரென நடக்க இயலாமல் அப்படியே சரிந்து கீழே அமர்ந்து விட்டார்.
மயக்கம் ஏதும் வராமல் திடீரென கீழே விழுந்ததால் அதிர்ச்சியடைந்த அப்பெண், உதவிக்காக அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார். பின்னர் அவர்களின் உதவியோடு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அப்பெண் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரது காலில் இருந்த பேண்ட்டை அகற்ற முடியாமல் சிரமப்பட்ட மருத்துவர்கள், பின்னர் அவற்றை கத்தரி கொண்டு கத்தரித்து எடுத்துள்ளனர். அப்போது தான் அவரது கால் முழுவதும் வீங்கிப் போய் இருந்தது தெரிய வந்தது.
மேற்கொண்டு மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் அவரது கால் நரம்புகள் இரண்டு சேதமடைந்திருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து 4 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் அவர்.
உடலைக் கவ்வுவது போன்ற ஆடைகள் அணிவதால் நரம்புகளில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இவ்வாறு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications