Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதல் படுத்தும் பாடு.. 9 மாதமாக கர்ப்பிணியாக நடித்த பெண்.. கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?

9 மாத கர்ப்பம் என்று ஒரு பெண் காதலனை ஏமாற்றி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

கொலம்பியா: இந்த காதல்தான் எவ்வளவு விசித்திரமானது!! தன் காதலுக்காக ஒரு பெண் செய்த அசிங்கமான காரியம் இன்று உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

கொலம்பியவை சேர்ந்த பெண் அன்டோனேலா. இவருக்கு வயது 37. இவரும் விக்டர் என்பவரும் சின்ன வயசிலிருந்தே நண்பர்கள். ஆனால் காதல் எல்லாம் ஒன்றும் இல்லை. அதேபோல, சண்டை, சச்சரவு, மனஸ்தாபமும் கிடையாருத. நல்ல நட்பாக பழகி வந்தபோது, இரண்டு பேருமே சூழ்நிலையால் தனித்தனியாக பிரிந்து போய்விட்டார்கள்.

பிறகு ரெண்டு பேருமே வேற ஒருவரை கல்யாணம் செய்துக்கிட்டு அவங்கவங்க வாழ்க்கையை பார்த்துக்கிட்டு போய்ட்டே இருந்தாங்க. ஒருத்தருக்கொருத்தர் தொடர்பு கூட கிடையாது. அன்டோனேலாவுக்கு 14 வயசில் ஒரு பெண்ணும், 13 வயசில் ஒரு மகனும் உள்ளார்கள். இருந்தாலும் கணவனை பிரிந்து வாழ்கிறார். ஆனால் விக்டருக்கு குழந்தையே பிறக்கவில்லை.

பத்திக் கொண்ட காதல்

பத்திக் கொண்ட காதல்

இந்த நிலையில் அன்டோனேலாவின் தம்பி போன வருடம் இறந்துவிட்டார். இது விக்டருக்கு தெரியவந்தது. சின்ன வயதில் பார்த்த ஒருவன் உயிரிழந்துவிட்டதை கேட்டதும் விக்டருக்கு மனம் என்னவோ செய்தது. அதனால் நேரில் போய் அன்டோனேலாவை சந்தித்து துக்கம் விசாரித்துவிட்டு வரலாம் என்று வந்தார். பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதும், காதல் கப்பென்று பத்திக் கொண்டது.

[ என்னது.. இளவரசி கார் கதவை திறந்து அவரே மூடினாரா.. இங்கிலாந்தில் ஒரே பரபரப்பு ]

அன்டோனேலா கோல்மால்

அன்டோனேலா கோல்மால்

நிறைய பேசினார்கள், நிறைய விவாதித்தார்கள், நிறைய பூரித்து போனார்கள், கூடவே அவர்களிடையே கள்ள உறவும் வளர்ந்தது. ஆனால் விக்டர் தன்னை விட்டுவிட்டு மீண்டும் போய்விடுவாரோ என்று எண்ணினார் அன்டோனேலா. அதனால் மனைவியை டைவர்ஸ் செய்துவிடுமாறு கேட்டிருக்கிறார். ஆனால் விக்டர் அதனை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. இதனால் மனைவியுடன் சேர்ந்து கொண்டு தன்னை வெறுத்துவிடுவாரோ என்ற பயம் அன்டோனேலாவுக்கு வந்துவிட்டது. அதனால் பல கோல்மால்களை செய்ய ஆரம்பித்தார் அன்டோனேலா.

தாங்கிய விக்டர்

தாங்கிய விக்டர்

முதலாவதாக விக்டரிடம் தான் கர்ப்பமாக இருப்பதாக பொய் சொன்னார். ஏற்கனவே குழந்தை இல்லாத விக்டருக்கு அன்டோனேலா இப்படி சொன்னதும், தலைகால் புரியவில்லை. மகிழ்ச்சியில் துள்ளினார். அன்டோனேலாவிடம் இன்னும் அதிகமாகவே ஒட்டிக் கொண்டார். பிறகு கர்ப்பம் என்பதை விக்டர் நம்ப வேண்டும் என்பதற்காக வாந்தி, மயக்கம், சோர்வு என ஒவ்வொன்றாக நடிப்பை காட்டினார். அதனால் விக்டர் அன்டோனேலாவை தனியே விட மனமே இல்லை. கூடவே உட்கார்ந்து கொண்டு கண்ணுக்குள் வைத்து தாங்க ஆரம்பித்தார்.

வயிற்றுக்குள் குஷன்

வயிற்றுக்குள் குஷன்

இதற்கு அடுத்த கட்டமாக கர்ப்பத்தில் குழந்தை இருப்பது போல போலியான ஒரு ஸ்கேன் ரிப்போர்ட் தயார் செய்தார் அன்டோனேலா. ஆனால் மாதங்கள் வளர்ந்தது. பார்க்கும் எல்லோரும் அன்டோனேலலாவிடம் "என்ன உன் வயிறு பெரிசாவே இல்லையே" என்று கேட்க ஆரம்பித்தார்கள். அதனால் அன்டோனேலா ஒரு குஷனை எடுத்து வயிற்றுக்குள் வைத்துக் கொண்டார். இப்படியே 9 மாதங்கள் ஓட்டினார். பிரசவ நேரத்தில் என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்தார். அதற்கும் ஒரு ஐடியா தயார் செய்தார்.

குட்டு வெளிப்பட்டது

குட்டு வெளிப்பட்டது

அதாவது, தன் தங்கையின் வீட்டுக்கு பிரசவத்துக்கு போவது மாதிரி போகலாம், குழந்தை பிறந்துவிட்டது என்று பொய்யும் சொல்லிவிட்டு, பிறகு அந்த குழந்தையை யாரோ கடத்தி விட்டார்கள் என்று சொல்லி வழக்கம்போல் விக்டர் உள்ளிட்டவர்களை ஏமாத்திவிடலாம் என திட்டம் தீட்டினார். ஆனால் நடந்துவிட்டதோ வேறு! அன்டோனேலா எந்த மருத்துவமனைக்கு போய் குழந்தை பெற்றுக் கொள்ளப்போகிறேன் என்று சொன்னாரோ அந்த மருத்துவமனையில் விக்டர் சென்று எதேச்சையாக விசாரிக்க போனபோது அன்டோனேலாவின் குட்டு வெளிப்பட்டுவிட்டது.

விம்மி அழுதார்

விம்மி அழுதார்

இதனால் மிகுந்த அவமானமும், அதிர்ச்சியும் அடைந்த அன்டோனேலா கதறினார். "விக்டர் மீதுள்ள காதல்தான் என்னை இப்படியெல்லாம் செய்ய தூண்டியது, அவரை ஏமாத்தணும்னு நான் கனவிலும் நினைக்கவில்லை, எல்லாமே அவர் மேல நான் வச்ச கண்மூடித்தனமான பாசம்" என்று விம்மி விம்மி போலீசாரிடம் சொல்லி அழுதார்.

அதிர்ச்சியில் உள்ளேன்

அதிர்ச்சியில் உள்ளேன்

ஆனால் விக்டர், "நான் உண்மையிலேயே அன்டோனேலாவை காதலிச்சேன். அவள் கர்ப்பம் இல்லைன்னு சொல்லியிருந்தா கூட அவளை விட்டு நான் போயிருக்க மாட்டேன். என் மேல அன்பினால இப்படி செஞ்சதா சொன்னாலும், என்னால அவளை உடனே ஏத்துக்க முடியல. இப்பவும் அவளை நான் நேசிக்கறேன். ஆனா அதிர்ச்சியிலிருக்கும் நான் கொஞ்ச காலம் விலகி இருக்கிறேன். பிறகு வேண்டுமானால் அவருடன் சேர்கிறேன்" என்கிறார்.

ஆலோசகரிடம் சிகிச்சை

ஆலோசகரிடம் சிகிச்சை

கணவனையும் பிரிந்து, பெற்ற பிள்ளைகளையும் பிரிந்து, உண்மையாக காதலித்தவனையும் பிரிந்து, இவ்வளவு வேலை காட்டிய அன்டோனேலா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா? மனநல ஆலோசகரிடம் சிகிச்சை பெற்று வருகிறார்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+