என்ன நான் கர்ப்பமா... பிரசவத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு ‘ஷாக்’ ஆன அமெரிக்கப் பெண்!
நியூயார்க்: அமெரிக்காவில் 47 வயது பெண் ஒருவர் பிரசவத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தான் கர்ப்பம் என தெரிந்து கொண்ட வினோதச் சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் மஸாசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜூடி பிரவுன்(47). சம்பவத்தன்று தனக்கு அடிவயிற்றில் கடுமையான வலி என சிகிச்சைக்காக மருத்துவரைக் காணச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதைக்கேட்டு அப்படியே ஆனந்த அதிர்ச்சி அடைந்துள்ளார் ஜூடி. காரணம் ஜூடிக்கு இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் குழந்தைகள் பிறக்கவில்லை. குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்த அத்தம்பதிக்கு இந்த தகவல் ஆனந்தத்தை அளித்துள்ளது.
அதே சமயம், தற்போது 47 வயதாகி விட்டதால் முதுமை காரணமாகவே உடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இத்தனை மாதங்கள் கருதி வந்துள்ளார் ஜூடி. அதனால் தான் கர்ப்பம் என்றதும் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மருத்துவர் கர்ப்பம் எனக் கூறிய அடுத்த ஒரு மணி நேரத்தில் ஜூடிக்கு மூன்றரைக் கிலோ எடையுடன் ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஜூடி தம்பதியினர் கரோலின் ரோஸ் எனப் பெயரிட்டுள்ளனர்.
தன்னுடைய இந்தப் பிரசவம் ஏதோ கனவு போல அற்புதமாக நிகழ்ந்துள்ளது என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ஜூட்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications