விலங்கியல் பூங்காவில் வேலியை தாண்டி புலி இருக்கும் பகுதிக்குள் குதித்த பெண்: ஏன் தெரியுமா?
டொரண்டோ: கனடாவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் பெண் ஒருவர் வேலியில் ஏறி புலி இருக்கும் இடத்தில் குதித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் டொரண்டோ நகரில் இருக்கும் விலங்கியல் பூங்காவுக்கு பெண் ஒருவர் தனது குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது அவரின் தொப்பி ஹரி எனப்படும் புலியை அடைத்து வைத்திருந்த பகுதியில் பறந்து விழுந்தது.
இதை பார்த்த அந்த பெண் வேலியில் ஏறிக் குதித்து புலி இருக்கும் பகுதியில் கிடந்த தனது தொப்பியை எடுத்தார். இதை பார்த்த புலி பாய்ந்து வந்தது. ஆனால் புலிக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே இரண்டு வேலிகள் அமைக்கப்பட்டிருந்ததால் அதனால் அந்த பெண்ணை நெருங்க முடியவில்லை.
அந்த பெண் முதல் வேலியில் ஏறி குதித்ததால் இரண்டாம் வேலிக்குள் இருந்த புலியிடம் சிக்காமல் தப்பித்தார். அவரின் செயலை பார்த்த பிற பார்வையாளர்கள் பதறிப்போய் அவரை திட்டினர்.
ஒரு தொப்பிக்காக அந்த பெண் செய்த செயலை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications