துபாய்: போதையில் காதலரைக் குத்திக் கொன்ற ரஷ்யப் பெண் கைது
துபாய்: காதலரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட ரஷ்யப் பெண் குடி போதையில் அவரைக் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் துபாயில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயின் அல் குவசைஸ் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பின் ஒன்பதாவது தளத்தில் வசித்து வந்த அராபியர் ஒருவரும், அதே பகுதியில் வசிக்கும் 32 வயது ரஷ்யப் பெண் ஒருவரும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.
திருமணம் செய்து கொள்ளாத போதும், அவர்கள் இருவரும் கணவன், மனைவியாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் சமீபகாலமாக காதலரின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அப்பெண் உணர்ந்துள்ளார். தனது காதலருக்கு வேறு சில பெண்களுடனும் தொடர்பு இருக்கலாம் என அவர் சந்தேகித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று குடி போதையில் இருந்த அந்தப் பெண், காதலரின் வீட்டுக்குச் சென்று இது தொடர்பாக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, கோபத்தில் அருகிலிருந்த கத்தியை எடுத்து காதலரை சரமாரியாகக் குத்தியுள்ளார் காதலி.
இதில், கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் கத்திக்குத்து காயமடைந்த காதலர் ரத்த வெள்ளத்தில் மயங்கி அதே இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், இது தொடர்பாக தனது தோழிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார் ரஷ்யப் பெண். அத்தோழி மூலமாக நடந்த கொலை போலீசுக்கு தெரிய வர, விரைந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் பலியானவரின் பிரேதத்தையும், கொலை ஆயுதமான கத்தியையும் பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து ரஷ்யப் பெண்ணைக் கைது செய்த போலீசார், அவர் மீது மீது கொலை வழக்குப் பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications