For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிராவிஸ், ஐ லவ்யூ டாக்... செல்ல நாயை மறுமணம் செய்யப் போகும் நெதர்லாந்து பெண்

Google Oneindia Tamil News

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் 41 வயது பெண் ஒருவர் தனது செல்ல நாயை இரண்டாம் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவரது முதல் திருமணம் ஒரு பூனையோடு நடந்தது குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்தின் ஹாலந்து பிரதேசத்தைச் சேர்ந்தவர் டொமினிக்(41). இவர் 16 ஆண்டுகளுக்கு முன்னர் தனது செல்லப் பூனையை பிரிய மனமில்லாமல், அதனைத் திருமணம் செய்து கொண்டார். அப்பூனையின் பெயர் டோரெக்.

Woman to marry her pet DOG after husband of 16 years - her CAT - dies

கிட்னி கோளாறால் அவதிப்பட்டு வந்த டோரெக், சமீபத்தில் மரணமடைந்தது. இதனால் சோகமான டொமினிக், இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். ஆனால், இப்போதும் அவர் ஒரு ஆணைத் தன் துணையாகத் தேர்ந்தெடுக்கவில்லை.

மாறாக தனது சோகத்திலிருந்து மீள, தனது செல்ல நாய் டிராவிஸை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். மேரியுவர்பெட்.காம் என்ற வலைதளம் மூலம் இத்திருமணம் நடைபெற உள்ளது.

விர்ச்சுவல் டூர் ஆக கணினி முன்னால் கரம் பிடிக்கும் வாய்ப்பை இந்த வலைதளம் வழங்குகிறது. திருமண சான்றிதழ் இந்த தளத்திலிருந்தே முறையாக தம்பதிகள் பெற முடியும் என்பது கூடுதல் தகவல்.

வழக்கமான சம்பிரதாயங்களுடன் இந்தத் திருமணத்திற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. டொமினிக்கும் தனது இரண்டாம் திருமண கனவுகளில் மிதந்து வருகிறாராம்.

கிரீஸ் நாட்டில் தங்கியிருந்தபோது அதன் கடற்கரையில் கடந்த 2003-ல் டொமினிக், டிராவிஸை சந்தித்தார். கொஞ்சம் கொஞ்சமாக டொமினிக்குடன் செல்லமாக பழக தொடங்கிய நாய் டிராவிஸ், ஒரு கட்டத்தில் கூடவே ஒட்டிக் கொண்டுவிட்டது. அப்போதிலிருந்து உடன் இருக்கும் டிராவிஸைத் தான் தற்போது முறைப்படி திருமணம் செய்து தனது வாழ்க்கைத் துணையாக்க உள்ளார் டொமினிக்.

English summary
Dominique Lesbirel was devastated after the death of her husband from kidney failure. Dominique's first husband Doerack was her CAT - and her new love is her DOG
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X