தென்னாப்பிரிக்காவில் மண்டேலா சிலையை நிர்வாணமாக கட்டிப்பிடித்த இளம்பெண்ணால் பரபரப்பு
ஜொஹன்னஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவில் பெண் ஒருவர் ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாணமாக நெல்சன் மண்டேலாவின் சிலையை கட்டிப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலாவின் உருவ சிலை ஜொஹன்னஸ்பெர்கில் இருக்கும் நெல்சன் மண்டேலா சதுக்கத்தில் உள்ளது. அந்த பிரமாண்ட சிலையை பார்க்க சதுக்கத்திற்கு பலர் வருவார்கள். இந்நிலையில் இளம் ஆப்பிரிக்க இளம்பெண் ஒருவர் மண்டேலாவின் சிலை அருகே வந்து வணக்கம் செலுத்தியுள்ளார்.
வணக்கம் செலுத்திய அவர் திடீர் என்று தனது ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிர்வாண கோலத்தில் சிலையை கட்டிப்பிடித்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் தங்களின் செல்போனில் அந்த காட்சியை படம் பிடித்தனர்.
திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த பெண் நிர்வாணமாக நிற்பதை பார்த்த அருகில் உள்ள உணவகத்தில் பணிபுரியும் ஆண்கள் தங்கள் வேலையை சரியாக செய்யவில்லையாம். மேலும் அந்த உணவகத்திற்கு சாப்பிட வந்த ஒருவர் அந்த பெண்ணை எட்டிப்பார்த்து தனது மனைவி கையால் அடிவாங்கியுள்ளார்.
அந்த பெண் நிர்வாணமாக சிலையின் மேல் சாய்ந்து நிற்கும் படத்தை ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications