மார்பில் படுத்திருந்த மலைப்பாம்பு.. கண் விழித்து மலைத்த பெண்.. நட்ட நடு ராத்திரி என்னாச்சு தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சிட்னி: பாம்பை தூரமாக பார்த்தாலே நடுநடுங்கி ஓடிவிடுவோம்.. ஆனால் ஒரு பெண்ணின் மார்பில் மலைப்பாம்பு படுத்திருந்ததாம்.. இப்படியொரு நிஜ சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.. அந்த நேரத்தில் அந்த பெண்ணின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? அதை பாதிக்கப்பட்ட பெண்ணே BBC சேனலில் விரிவாக பேசியிருக்கிறார்.. அதன் சுருக்கத்தை பற்றி இங்கே பார்ப்போம்.

ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் வசித்து வருகிறார் ரேச்சல் ப்ளூர்.. இவர் சம்பவத்தன்று தன்னுடைய கணவருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்...

Python Woman Snake

அது நள்ளிரவு நேரம்... எல்லாருமே ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள். அப்போது ரேச்சல் திடீரென கண் விழித்தார்... காரணம், அவரது மார்பின் மீது ஏதோ கனமான ஒன்று இருப்பது போல உணர்ந்தது...

மார்பில் மலைப்பாம்பு

முதலில் அது வீட்டு நாயாக இருக்கும் என்று நினைத்திருக்கிறார்.. அதனால் கையை நீட்டி தடவி விட்டுள்ளார். அப்போதுதான் அவர் தொட்டது நாய் இல்லை என்பதும், அது மென்மையாகவும், வழுவழுப்பாகவும், மெதுவாக நெளிவதையும் ரேச்சல் உணர்ந்திருக்கிறார்.. உள்ளுக்குள் லேசாக உதறல் எடுத்துள்ளது.. எனினும் போர்வையை கழுத்துவரை இழுத்துக்கொண்டு, அசையாமல் படுத்திருந்தார்.

பிறகு அவர் தன்னுடைய கணவரை மெதுவாக எழுப்பினார். கணவர் உடனே அருகில் இருந்த விளக்கை ஏற்றினார்.. விளக்கு போட்டு பார்த்த பிறகுதான் 2 பேருமே அதிர்ச்சியில் ஆடிப்போனார்கள்.. ரேச்சலின் மார்பின் மீது ஒரு பெரிய பாம்பு சுருண்டு படுத்திருந்தது. அந்த பாம்பு சுமார் 2.5 மீட்டர் நீளமாக இருந்தது...

வளர்ப்பு நாய்

பாம்பை பார்த்ததுமே ரேச்சலுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.. உடனே தன்னுடைய வளர்ப்பு நாயை, அந்த அறையிலிருந்து வெளியேற்றும்படி சொன்னார்.. காரணம், அந்த நாயை பாம்பு பார்த்தால், முதலில் காலியாவது நாயாகத்தான் இருக்கும்.. எனவே ரேச்சல் சொன்னபடியே நாய் பத்திரமாக ரூமை விட்டு வெளியேற்றப்பட்டது..

அதற்கு பிறகு ரேச்சல் மெதுவாக நகர ஆரம்பித்தார். பாம்பு பயப்படக்கூடாது என்பதற்காக, அவர் ஒரு சிறிய அசைவும் இல்லாமல் கவனமாக இருந்தார். போர்வையின் கீழிருந்து மெதுவாக வெளியே வந்தார்..

ஜன்னலில் வால்

பிறகுதான் பாம்பை முழுமையாக கவனித்தார்... அந்த பாம்பு ஜன்னல் வழியாக வீட்டுக்குள் வந்திருக்கலாம் என்று நினைத்தார்... பாம்பு பெரியதாக இருந்ததால், அதன் வால் ஒரு பகுதி இன்னும் ஜன்னல் வெளியே இருந்தது.

பிறகு ரேச்சல் பாம்பை மெதுவாக பிடித்தார்... அதிசயமாக அந்த பாம்பு எந்த ஆத்திரமும் காட்டவில்லை... அது அமைதியாக இருந்தது. ரேச்சலும் அமைதியாக இருந்ததால் பாம்பும் அமைதியாக இருந்ததாம்.. இறுதியில் அந்த பாம்பை அது வந்த வழியிலேயே மெதுவாக வெளியே அனுப்பினார்.

பாம்பு - நள்ளிரவு சம்பவம்

இந்த பாம்பு "கார்பெட் பைதான்" வகையை சேர்ந்தது. அதாவது இது விஷமில்லாத பாம்பு... மனிதர்களுக்கு இது விஷம் கொடுக்காதாம்.. ஆஸ்திரேலியாவில் இப்படிப்பட்ட பாம்புகள் நிறைய காணப்படும்.. இந்த பாம்புக்கு சாப்பாடு என்ன தெரியுமா? சின்ன சின்ன பறவைகள், குட்டி குட்டி விலங்குகள்தான்..

அதனால்தான் கணவர், வளர்ப்பு நாயை பாதுகாப்பாக காக்க முடிந்தது.. அந்த மலைப்பாம்பையும் பத்திரமாக திருப்பி அனுப்ப முடிந்தது.. மார்பு மீது படுத்திருந்த மலைப்பாம்பை ஒருவழியாக வெளியேற்றிவிட்டார் ரேச்சல்.. ஆனால் இந்த நள்ளிரவு சம்பவ அதிர்ச்சியில் இருந்து ரேச்சல் இன்னும் மீளவில்லையாம்....!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+