"ஸ்வஸ்திக்".. பிஞ்சுகளை நாசம் செய்த வீரர்கள்.. பலாத்காரம் செய்ய கணவனுக்கு பர்மிஷன் தந்த கொடூர பெண்
பெண்களை பலாத்காரம் செய்ய சொன்ன ரஷ்ய வீரர் மனைவி சிக்கி உள்ளார்
மாஸ்கோ: இளம்பெண்களை பலாத்காரம் செய்யுங்கள் என்று தன் கணவருக்கு ஐடியா தந்துள்ளார் மனைவி.. இந்த ஜோடியின் போட்டோக்களைதான் உக்ரைன் ராணுவ அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா கொலை வெறி தாக்குதலை நடத்தி கொண்டிருக்கிறது.. பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்துவிட்டது.. லட்சக்கணக்கான மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு தப்பி வருகிறார்கள்.
இதனிடையே, உக்ரைன் பெண்களையும், ரஷ்ய படைவீரர்கள் மிக கொடுமையாக பலாத்காரம் செய்து வருவதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

புச்சா நகர்
இதுகுறித்து ஒரு அதிகாரி சொல்லும்போது, "புச்சா நகரில் உள்ள ஒரு வீட்டின் அடித்தளத்தில், 14 முதல் 24 வயதுடைய 25 சிறுமிகள் மற்றும் பெண்களை மிக கொடூரமான முறையில் பலாத்காரம் செய்துள்ளனர்.. திட்டமிட்ட முறையிலேயே பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்களில் இப்போது ஒன்பது பேர் கர்ப்பமாக உள்ளனர்," என்று வேதனையுடன் கூறினார்.

உடலுறவு
அதுமட்டுமல்ல, உக்ரைனிய குழந்தைகளை பெற்றெடுப்பதைத் தடுக்க, எந்த ஆணுடனும் உடலுறவு கொள்ள விரும்பாத அளவிற்கு யுக்ரேனிய பெண்களை பாலியல் வல்லுறவு செய்வோம் என்று ரஷ்ய வீரர்கள் சொல்லி வருகிறார்களாம்.. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இன்னொரு பகீர் தகவல் வெளியானது.. உக்ரைனிய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் ரஷ்ய ராணுவ வீரர் ஒருவருக்கு, அவரது மனைவியே ஐடியா தந்தாராம்..

ஆடியோ
அதுவும் போன் செய்து, அந்த பெண்களை நாசம் செய்ய சொல்லி உள்ளதாக ஒரு ஆடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியானது.. 30 நொடிகள் கொண்ட அந்த ஆடியோ பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.. இந்த ஆடியோவின் உண்மைதன்மை தெரியவில்லை.. அதனால், இதுகுறித்து ஐரோப்பாவின் லிபர்ட்டி என்ற பத்திரிகை விசாரணையில் குதித்தது.. போனில் பேசியது யார்? உண்மையிலேயே ரஷ்ய வீரர் மனைவிதானா? ஆடியோவின் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்தது.

போட்டோக்கள்
அப்போதுதான், அந்த ஆடியோவில் பேசியவர்கள் ரோமன் பைகொவோஸ்கி மற்றும் அவரது மனைவி ஓல்கா பைகோவ்ஸ்கயா என்பது தெரிய வந்துள்ளது... இதையடுத்து அவர்களின் போன் நம்பர்களை உக்ரைன் அதிகாரிகள் மூலம் பெற்ற பத்திரிகையாளர்கள், அவற்றை சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டு, தம்பதியின் போட்டோக்களை கண்டுபிடித்தனர்... இருவருமே உண்மையான கணவன் மனைவி என்பது தெரியவந்தது..

கணவன்
ரோமன் பைகோவோஸ்கியின் அம்மாவும் இவர்கள் 2 பேர்தான் என்று உறுதி செய்தார். ரோமன் ரஷ்ய ராணுவத்தில் பணி புரிவதும் உண்மை என்று தெரியவந்தது. அனைத்து தரகலும் உண்மை என்று நிரூபணமான நிலையில், ரோமனை அழைத்து பேச முயன்றுள்ளனர்.. ஆனால், அவர் சேவஸ்தோபோல் என்ற இடத்தில் இருப்பதாகவும், காயமடைந்துள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சொன்னார்..

ஆடியோ
அந்த தகவல் உண்மைதான் என்று அவரது மனைவியும் உறுதி செய்தார்... ஆனால், ஆடியோ விஷயத்தை மட்டும் அந்த பெண் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்.. அந்த குரல் தன்னுடையது இல்லை என்றும் சாதிக்கிறாராம்.ஆனால் உக்ரேனிய அதிகாரிகளோ இருவருடைய குரலும், ஆடியோவில் வெளியான குரலும் ஒரே போன்று இருப்பதை உறுதி செய்துள்ளனர்.. !
-
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications