Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முகம் முழுக்க எறும்பு ஊர்வது போல.." டெய்லி மேக்கப் போட்டதால் வந்த வினை.. இந்த தப்பை மட்டும் செய்யாதீங்க

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த 22 ஆண்டுகளாகத் தினமும் மேக்கப் போட்டு வந்திருக்கிறார். இப்போது அந்தப் பெண்ணுக்கு மோசமான சருமப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளாராம். இதற்கு அவர் செய்த ஒரு மேஜர் தவறே முக்கிய காரணம். இது குறித்த தகவல்களை அவரே வேதனையோடு பகிர்ந்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த 37 வயதான பெண் நியோயோமியான். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தினசரி மேக்கப் போட்டு வந்துள்ளார். ஆனால், அவர் ஒரு பெரிய தவறை செய்துவிட்டாராம். அதாவது எப்போதும் மேக்கப் போட்டால் அதை நாளின் முடிவில் சரியாக அகற்றிவிட வேண்டும். ஆனால், இவர் மேக்கப்பை அகற்றாமலேயே இருந்துள்ளார்.

Woman Wore Makeup Every Day for 22 Years that affects her skin in very bad way

மிக பெரிய தவறு

இதனால் அவருக்குக் கடுமையான அலர்ஜி ஏற்பட்டு இருக்கிறது. நீண்ட காலம் மேக்கப் போடுவது+ அதை முறையாக அகற்றாமல் விட்டதால் இப்போது அவர் கடுமையான சருமப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளார். இதனால் "ஹார்மோன் முகம்" என்ற பாதிப்பை அவர் எதிர்கொண்டு இருக்கிறார். அவரது முகம் வீங்கியும், சிவந்து போயும், தடிப்புகளுடன் இருக்கிறது. தொடர்ச்சியாகப் பல நாட்கள் சரும அலர்ஜி இருந்தால் அது இப்படித் தான் இருக்கும். தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து அந்தப் பெண் பதிவிட்ட வீடியோ இணையத்தில் உடனடியாக டிரெண்ட் ஆகியுள்ளது.

37 வயதான நியோயோமின் தனது 15 வயதில் இருந்தே மேக்கப் போட ஆரம்பித்துவிட்டாராம். 22 வருடங்களாகத் தினமும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், தொடக்க நாட்களிலேயே அவருக்குச் சில க்ரீம்கள் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முகப்பரு கிரீம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது.

சருமப் பாதிப்பு

ஆனாலும், மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்ததால் அவர் சரியான நேரத்தில் சிகிச்சை பெற முடியவில்லை. மேலும், அவர் தொடர்ந்து மலிவான திரவ பவுண்டேஷன்களை பயன்படுத்தி வந்திருக்கிறார்.. இது காலப்போக்கில் அவரது தோல் நிலையை மேலும் மோசமாக்கியதாக அவர் கூறுகிறார். மேலும், மேக்கப் மற்றும் ஹேர் டிரஸ்ஸிங் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் அவரது சருமத்தில் தொடர்ச்சியாகப் பல கெமிக்கல்கள் பட்டுள்ளது. மேலும், எப்போதும் மேக்கப் அணிந்தே இருக்க வேண்டும் என்ற நிலையிலும் இருந்துள்ளார்.

ஊசி போட்டு சிகிச்சை

இதுபோக கடந்த 2011ம் ஆண்டு முதல் அவர் தனது தோற்றத்தை மேம்படுத்த முகத்தில் ஊசி போட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஆனால், அது நிலைமையை மோசமாக்கியது. மேலும் அவரது முகத்தில் அதிகப் பாதிப்பை ஏற்படுத்தியது. ஹார்மோன் தொடர்பான தோல் பிரச்சினைகள் எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்பதை இளமையாக இருந்தபோது தான் உணரவில்லை என்று இப்போது புலம்புகிறார் நியோயோமின்!

புலம்பிய பெண்

இது குறித்து நியோயோமியான் மேலும் கூறுகையில், "நான் 25 வயதை அடையும் வரை, ஹார்மோன் தோல் பிரச்சினைகள் எவ்வளவு தீவிரமாக இருக்கும் என்பதை உணரவில்லை. தோல் சிவந்து போனால் அல்லது அரிப்பு ஏற்பட்டால் ஆயில்மெண்ட் மூலம் சரிசெய்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் 25 வயதுக்குப் பிறகு, எல்லாமே மாறிவிட்டது. ரோசாசியா மற்றும் டெமோடெக்ஸ் மைட் ஒட்டுண்ணித் தொற்றுகளும் எனக்கு ஏற்பட்டது. என் முகத்தில் ஆயிரக்கணக்கான சிறிய எறும்புகள் ஊர்வதுபோல இருக்கும்.

தவறு செய்துவிட்டேன்

நான் சிகிச்சை எடுக்கும்போதும் ஒரு தவறு செய்துவிட்டேன். அதாவது சரும பராமரிப்பிற்குச் சில மருந்துகளை மருத்துவர்கள் வழங்குவார்கள். ஆனால், தோல் சிவப்பது குறைந்தால் அல்லது அரிப்பு குறைந்தால் அதை நிறுத்திவிடுவேன். மருத்துவர் சொல்வதை முழுமையாகக் கேட்காமல் விட்டுவிட்டேன். அதுவும் நிலைமையை மோசமாக்கியது" என்று வேதனையோடு கூறுகிறார்.

மேலும், அவர் அழகுசாதனப் பொருட்கள் சிலருக்கு ஒத்துக்கொள்ளாமல் போக வாய்ப்பு இருப்பதால் சருமம் எப்படி ரியாக்ட் செய்கிறது என்பதைக் கவனிக்குமாறும் அவர் கூறினார். கண்ணை மூடிக்கொண்டு எல்லா மேக்கப்களையும் போட்டால் தனக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும் என்றும் அவர் கூறுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+