குத்துன்னா இதாய்யா குத்து... கோஷ்டிக் கலவரத்தை அடக்க குத்தாட்டத்தில் குதித்த பெண் போலீஸ்... கலகலக்கு
நியூயார்க்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இரண்டு கோஷ்டிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, அதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அப்போது, அவர்களுக்கிடையே சண்டையை விலக்கிவிட்டு அங்கு கூடியிருந்த கூட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த கோஷ்டியில் இருந்த 17 வயது பெண் ஒருவர் போலீசாரை வெறுப்பேற்றும் விதமாக ‘வாட்ச் மீ'(சைலண்ட்டோ) என்கிற பிரபலப் பாடலைப் போட்டு திடீரென ஆடத் தொடங்கினார். அவர் ஆடியது மட்டுமல்லாமல் அந்த பெண் போலீஸ் அதிகாரியிடம் தன்னைப் போல ஆடுவதற்கு உங்களுக்கு தில் இருக்கிறதா என கேட்டு அவரையும் வம்படியாக களத்தில் இறக்கினார்.

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, அந்த பெண்ணுக்கு சவால் விடும் விதமாக பெண் போலீஸ் அதிகாரியும் களத்தில் இறங்கி சரி சமமாக செம குத்து குத்தி கலவர பூமியாக காட்சியளித்த அந்த இடத்தையே கலகலக்கச் செய்தார். அவரது ஆட்டத்தை அங்கு கூடியிருந்த கூட்டம் கரகோஷம் எழுப்பி வரவேற்றது.
இறுதியில், பெண் போலீசை கட்டித் தழுவிய அந்த பெண், இதுவரை போலீஸ் என்றாலே ஒருவித வெறுப்பு எனக்குள் இருந்து வந்தது. அதனை மாற்றும் வகையில் உங்கள் அணுகுமுறை இருந்தது. உங்களைப் போலவே அனைத்து போலீசாரும் மக்களுடன் இணக்கமாக பலக வேண்டும் எனக் கூறி அவரை கட்டித் தழுவி, இருந்த போதிலும் ஆட்டத்தில் நான் தான் வெற்றி பெற்றேன் எனக் கூறி புன்னகை பூத்து அங்கிருந்து கிளம்பினார்.
தந்து முகநூலில் ஷேர் செய்துள்ள இந்த விடியோவை இதுவை ஆறு லட்சத்துக்கும் மேலானவர்கள் பார்த்து ரசித்துள்ளதாக அந்த பெண் கூறியுள்ளார்.
இளைஞர்களின் சண்டையை நிறுத்த ஆயுதத்தை கையில் எடுக்காமல், அவர்களது போக்கிலேயே சென்று, நிலைமையை நடனமாடி சமாளித்த அந்தப் பெண் போலீஸ் அதிகாரிக்கு வாஷிங்டன் நகர மேயர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications