மைக்ரோ ஓவனில் வைத்து குழந்தையை எரித்துக் கொன்ற தாய்க்கு 26 ஆண்டு சிறை
வாஷிங்டன்: அமெரிக்காவில் தனது ஒரு வயதுக் குழந்தையை மைக்ரோ ஓவன் அடுப்பில் வைத்து கொலை செய்த பெண்ணுக்கு கலிபோர்னியா நீதிமன்றம் 26 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்த பெண் காயங் (34). இவர் கடந்த 2011-ம் ஆண்டு தனது ஒரு வயதுக் குழந்தை மிராபெல்லை மைக்ரோ ஓவன் அடுப்பில் வைத்து சுமார் 5 நிமிடங்கள் வேக வைத்தார். இதனால் குழந்தை உடல் வெந்து பரிதாபமாக இறந்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட காயங் மீது கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கயாங் சில நாட்களாக மன நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு அதற்கான சிக்கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால் அவரை ஆய்வு செய்த மருத்துவர்கள், குழந்தையை கொலை செய்த போது அதற்கான அறிகுறிகள் அவரிடம் எதுவும் தென்படவில்லை என்று கூறினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் காயங் குற்றவாளி என உறுதி செய்தது.
இவருக்கு திருமணமாகி ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில், மிராபெல் தயோ லோ, நான்காவதாக பிறந்தார். குழந்தை அடிக்கடி தொந்தரவு செய்துகொண்டே இருந்ததனால் காயங் அதனை மைக்ரோ ஓவன் அடுப்பில் வைத்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.
அதனையடுத்து, அவருக்கு 26 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications