உடல் பருமனைக் குறைக்க நின்று கொண்டே படிக்கும் வகுப்பு: ஆஸி.யில் அறிமுகம்
சிட்னி: மாணவர்களின் உடல் பருமன் உள்ளிட்ட ஆரோக்கியச் சீர்கேட்டைக் குறைக்கும் வகையில் நின்றுகொண்டே படிப்பதற்கான வகுப்பறை ஒன்று, உலகிலேயே முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
கடந்த காலத்தை ஒப்பிடும் போது, இன்றைய மாணவர்களின் உடல் உழைப்பும் குறைவு. இணையம், தொலைக்காட்சி என அவர்களது பெரும்பான்மையான நேரங்கள் அமர்ந்து கொண்டே தான் கழிகின்றன.
ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, மாணவர்கள் மணிக்கணக்கில் இருக்கையில் அமர்ந்தே இருப்பதால் உடல் குண்டாகி உடல் பருமனால் அவதிப்படும் நிலைமை, நீரிழிவு மற்றும் இதயநோய் முதலியவை உண்டாவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்தது.
எனவே, இதற்குத் தீர்வு காணும் வகையில் நின்று கொண்டே படிக்கும் வகுப்பறை ஒன்று ஆஸ்திரேலியாவில் வடிவமைக்கப் பட்டுள்ளது.

புதிய டெஸ்க்....
பேக்கர் ஐடிஐ இதயம் மற்றும் நீரிழிவு நோய் ஆய்வு மைய வல்லுநர்கள், மாணவர்களின் உயரத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளக்கூடிய டெஸ்க்கை வடிவமைத்துள்ளனர். தமது தேவைக்கேற்ப நின்று கொண்டோ அல்லது அமர்ந்தபடியோ பாடம் கேட்க வகை செய்யப்பட்டுள்ளது.

6ம் வகுப்பு மாணவர்களுக்கு...
இந்த சிறப்பு டெஸ்க், மான்ட் ஆல்பர்ட் தொடக்கப்பள்ளியின் 6ம் வகுப்பு அறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டெஸ்க் அமைக்கப்பட்டதிலிருந்து நிறைய மாணவர்கள் நின்று கொண்டே பாடம் கேட்கின்றனர்.

ஆய்வு...
மாணவர்கள் இவ்வாறு நின்றபடி கல்வி கற்பதால் அவர்களது சுகாதாரம், உடல்தகுதி, படிப் பாற்றல், நினைவுத்திறன் மேம்படுகிறதா என்பதை கணக்கிட விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

பாடத்திட்டம் மாற்றியமைப்பு...
இதற்கு முந்தைய ஆய்வுகள் மூலம், பள்ளிக்கூடங்களில் தினமும் 3ல் 2 பங்கு காலம் அமர்ந்தபடியே இருந்தால் நீரிழிவு நோய், இதய நோய், உடல் ஊதி பருமனாதல் போன்ற பிரச்சினைகள் வருகிறன்றன என்பது கண்டறியப் பட்டது குறிப்பிடத்தக்கது.

அமோக ஆதரவு....
இந்தப் புதிய திட்டத்துக்கு மாண வர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளதாக மான்ட் ஆல்பர்ட் தொடக்கப்பள்ளி முதல்வர் ஷரோன் சேட்லிக் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications