2015-ல் ‘ஆர்.டி.டி.எஸ்’ மலேரியா தடுப்பூசி விற்பனைத் தொடக்கம்: கிளைக்ஸோ ஸ்மித்க்ளைன் முடிவு
லண்டன்: மலேரியா தடுப்பூசியான ஆர்.டி.டி.எஸ் வரும் 2015ம் ஆண்டு சந்தையில் விற்பனைக்கு வர இருப்பதாக அதன் தயாரிப்பு நிறுவனமான கிளாக்ஸோ ஸ்மித்க்ளைன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொசுக்கடி மூலம் பரவக்கூடிய நோயான மலேரியாவால் உலகமக்கள் ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் பலியாகி வருகின்றனர். குறிப்பாக வறண்ட பகுதிகளாக விளங்கக்கூடிய ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதிகளில் உள்ள குழந்தைகளிடத்தில் இந்த நோயின் தாக்கத்தினால் ஏற்படும் உயிர்ப்பலி அதிகமாக உள்ளது.
எனவே, இந்நோயினைத் தடுக்கும் தடுப்பு மருந்தினை கண்டறியும் முயற்சியில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த கிளாக்ஸோ ஸ்மித்க்ளைன் நிறுவனத் தயாரிப்பான ஆர்டிஎஸ்,எஸ் தடுப்பூசியை கடந்த 18 மாதங்களாக சோதனை முயற்சியில் பயன் படுத்திப் பார்த்ததில் சிறுவயதினரிடையே இந்த மருந்தானது இறப்பு விகிதத்தைப் பாதியாகக் குறைத்தது தெரிய வந்தது.
இம்மருந்தின் மூலம் இறப்பு சதவிகிதமும் 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. இதன் மூலம் இம்மருந்து மலேரியாவுக்கு எதிராக செயல்படுவது உறுதியாகியுள்ளது.
எனவே, வரும் 2014ம் ஆண்டு கிளாக்ஸோ ஸ்மித்க்ளைன் தனது ஒழுங்குமுறை விண்ணப்பத்தை ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்திடம் வழங்கத் தீர்மானித்துள்ளது. அதன் பின்னர் விற்பனைக்கான இதன் தயாரிப்பு தொடங்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈஎம்ஏயின் அனுமதி கிடைத்த உடன் வரும் 2015 ஆம் ஆண்டு முதல் ஜெனிவாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் உலக சுகாதாரக் கழகம் இந்தத் தடுப்பூசியை குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கும் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications