உலகின் முதல் "சோலார் விமானம்" - அபுதாபியில் தொடங்கியது முதல் பயணம்.. நாளை அகமதாபாத் வருகை!!
அபுதாபி: சூரிய சக்தியில் மட்டுமே இயங்கும் உலகின் முதலாவது சோலார் விமானம் தனது முதலாவது சர்வதேச பயணத்தை அபுதாயில் இன்று தொடங்கியுள்ளது. முதலில் ஓமனின் மஸ்கட்டில் இந்த விமானம் தரையிறங்குகிறது. பின்னர் அங்கிருந்து இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு நாளை இந்த விமானம் வருகை தர உள்ளது.
உலகம் முழுவதும் பெட்ரோலிய எரிபொருள் மற்றும் பல்வேறு ரசாயன நச்சு புகைகளால் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க, பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அத்தகைய ஆராய்ச்சியின் விளைவாக, சூரிய ஒளி மூலம் இயங்கும் முதல் சோலார் விமானம் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டது. இந்த விமானத்தின் 72 மீட்டர் நீள இறக்கைகளில் 17,248 சூரிய தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன.
ஒரு ஏர்பஸ் ஏ380 விமான வடிவில் இருக்கும் இந்த சோலார் விமானத்தில், எடையை குறைப்பதற்காக 2.3 டன் கார்பன் தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன.
இந்த சோலார் விமானத்தை எரிபொருள் மூலம் இயக்காமல் முற்றிலும் சூரிய ஒளி மூலம் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. பகல் நேரத்தில் சேமிக்கப்படும் சூரிய ஒளியை வைத்து, இரவு நேரத்திலும் அந்த விமானம் இயங்கும் வகையில் தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சிறப்புமிக்க சோலார் விமானம் இன்று காலை 6.30 மணியளவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி நகரில் தனது முதல் பயணத்தைத் தொடங்கியது. முதலில் ஓமனின் மஸ்கட்டில் தரை இறங்குகிறது.
பின்னர் அங்கிருந்து குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்து வருகை தருகிறது. அகமதாபாத்தில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் வாரணாசிக்கு பறக்கும் இந்த விமானம் கங்கை நதி மீது பறந்த படி சுற்றுச் சூழல் குறித்து பிரசாரம் செய்கிறது.
இதனைத் தொடர்ந்து மியான்மர் வழியாக சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த சோலார் விமானம் பயணத்தை மேற்கொள்கிறது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications