உலகத்தின் நீளமான நூடுல்ஸ் இதுதான்... கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது! - வீடியோ
சீனாவில் கின்னஸ் சாதனைக்காக 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு பெரிய நூடுல்ஸ் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

பெய்ஜிங்: சீனாவில் கின்னஸ் சாதனைக்காக 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு பெரிய நூடுல்ஸ் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. உலகிலேயே இதுதான் நீளமான நூடுல்ஸ் என்ற சிறப்பு பெயரை பெற்று இருக்கிறது.
இதை தயாரிப்பதற்கே பல மணி நேரம் ஆகி இருக்கிறது. மேலும் முக்கிய சமையல் கலைஞர்கள் பலர் ஒன்றாக இணைந்து இந்த சாதனையை செய்து இருக்கிறார்கள்.
சீனர்களின் முக்கிய உணவு நூடுல்ஸ் ஆகும். அதை வைத்து தற்போது அவர்கள் பெரிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இந்த 5 நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸை தயாரிக்க பல மணி நேரம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேவையான பொருட்கள்
இந்த நூடுல்ஸை தயாரிக்க மொத்தம் 40 கிலோ ரொட்டி மாவு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சீனாவில் அதிகம் பயன்படுத்தும் ராமன் நூடுல்ஸ் வகையில் இது தயாரிக்கப்பட இருந்ததால் ரொட்டி மாவு வாங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக 26.8 லிட்டர் தண்ணீர் செலவாகி இருக்கிறது. அதேபோல் 0.6 கிராம் உப்பு பயன்படுத்தப்பட்டு உள்ளது.

செய்தது எப்படி
இதை செய்வதற்கு மொத்தம் 17 தலைசிறந்த சமையல் கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்த நூடுல்ஸ் செய்வதற்கு 15 மணிநேரத்திற்கும் அதிகமாக ஆகியுள்ளது. இது முழுக்க முழுக்க கைகளால் செய்யப்பட்ட நூடுல்ஸ் ஆகும். மொத்தமாக இது 68 கிலோ இருந்துள்ளது. மேலும் 3 கிலோ மீட்டர் நீளம் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கின்னஸ் சாதனை
இந்த நீளமான நூடுல்ஸ் தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இதன் தயாரிப்பு பணிகள் வீடியோவாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு ஜப்பானை சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவர் 1800 அடியில் நூடுல்ஸ் செய்ததே இதுவரை நீளமான நூடுல்ஸாக இருந்தது. இதன் நீளத்தை கணக்கிடவே மொத்தம் 3 மணிநேரம் ஆகி இருக்கிறது.

எதற்காக
இந்த சாதனைக்கு பின் முக்கியமான காரணம் ஒன்றும் இருக்கிறது. சீனாவில் இந்த சாதனை செய்யப்பட்ட அன்று 'முதியோர்கள் தினம்' கொண்டாடப்பட்டு இருக்கிறது. இதற்காகவே இந்த சாதனை செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த உணவு சாஸ் ஊற்றி அங்கு இருந்த முதியவர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. நீண்ட ஆயுளை குறிக்கவே நீளமான நூடுல்ஸ் செய்யப்பட்டு இருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications