For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தங்கம், வைரத்தால் ஆன 4 கார் டயர்கள்: விலை ரூ. 4 கோடி ஒன்லி!

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் தங்கம் மற்றும் வைரத்தால் ஆன 4 கார் டயர்கள் ரூ. 4 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. உலகின் மிக விலை உயர்ந்த கார் டயர்கள் என கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியரான ஹர்ஜீவ் கந்தாரியின் இசட் டயர்ஸ் என்ற நிறுவனம் துபாயில் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் 4 கார் டயர்களை தயாரித்தது. டயர்கள் என்றால் அது சாதாரண டயர்கள் இல்லை.

World’s most expensive car tyres embedded with gold, diamonds sold for Rs 4 cr in UAE

மாறாக 24 கேரட் தங்கம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வைரங்களை கொண்டு தயாரிக்கப்பட்டன. அந்த டயர்களுக்கு அபுதாபியில் உள்ள புதிய அதிபர் மாளிகையில் பணியாற்றிய அதே கலைஞர்கள் தங்க வேலைப்பாடுகளை செய்தனர்.

துபாயில் வடிவமைக்கப்பட்ட அந்த டயர்களை இத்தாலியை சேர்ந்த கலைஞர்கள் அழகுபடுத்தினர். அந்த டயர்கள் தான் உலகின் மிக விலை உயர்ந்த டயர்கள் என்று கின்னஸ் சாதனை புத்தக்கத்தில் இடம்பிடித்துள்ளது. இப்படி பார்த்து பார்த்து செய்யப்பட்ட 4 டயர்களும் துபாயில் நடந்த வர்த்தக கண்காட்சியில் ரூ.4.01 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

டயர்கள் விற்பனை மூலம் கிடைத்துள்ள ரூ.4.01 கோடியை இசட் டயர் நிறுவனத்தின் அறக்கட்டளையான ஜெனிசிஸுக்கு அளிக்கப்படும் என கந்தாரி தெரிவித்துள்ளார்.

English summary
Embedded with 24-carat gold and specially selected diamonds, a set of four tyres made by an NRI-owned firm in Dubai was sold for more than Rs 4 crore, setting the Guinness world record for most expensive set of car tyres.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X