சாம்பார், வடை வழங்கும் உலகின் பழமையான சைவ ஹோட்டல்: இது சுவிட்சர்லாந்தில்
ஜுரிச்: சுவிட்சர்லாந்தில் உள்ள உலகின் பழமையான சைவ உணவகத்தில் தென்னிந்திய உணவான சாம்பார் வடை விற்பனை செய்யப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜுரிச் நகரில் இருக்கும் ஹாஸ் ஹில்டல் தான் உலகின் பழமையான சைவ உணவகம் ஆகும். உலகின் பழமையான சைவ உணவகம் ஹாஸ் என்று கடந்த 2012ம் ஆண்டு கின்னஸ் அதிகாரிகள் சான்றிதழ் அளித்தனர்.
1898ம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து சுவிட்சர்லாந்தில் குடியேறிய சிலரால் ஹாஸ் ஹில்டல் துவங்கப்பட்டது. ஆரோக்கியமாக வாழ சைவ உணவு நல்லது என்பதை உலகிற்கு தெரிவிக்க அந்த ஹோட்டல் துவங்கப்பட்டது.

மொரார்ஜி தேசாய்
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் சுவிட்சர்லாந்தில் பயணம் மேற்கொண்டபோது ஹாஸ் ஹில்டல் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டுள்ளார். உலக நாடுகளைச் சேர்ந்த பல பிரபலங்கள் அந்த ஹோட்டலில் சாப்பிட்டுள்ளனர்.
|
டெல்லி
ஹோட்டலை துவங்கிய மார்கரித்தின் மருமகள் கடந்த நூற்றாண்டில் சைவ உணவு பற்றி மேலும் கற்றுக் கொள்ள டெல்லி வந்தார். அவர் இந்தியாவில் பல பிரபல சைவ உணவு வகைகளை சமைக்க கற்றுக் கொண்டு நாடு திரும்பினார். நாடு திரும்பிய உடன் தான் கற்றுக் கொண்ட இந்திய உணவு வகைகளை அவர் அந்த ஹோட்டலில் அறிமுகப்படுத்தினார். அந்த உணவு வகைகள் தற்போதும் அங்கு பிரபலமாக உள்ளன.

சாம்பார் வடை
ஹாஸ் ஹில்டல் ஹோட்டலில் தென்னிந்திய உணவு வகையான சாம்பார், வடை முதல் பாலக் பன்னீர் வரை பல வகையான இந்திய உணவுகள் கிடைக்கின்றது.
|
ஹில்டல்
சைவப் பிரியர்களை கிண்டல் செய்த நேரத்தில் ஹாஸ் ஹில்டல் ஹோட்டல் துவங்கப்பட்டது. அதனால் ஹோட்டலில் வியாபாரம் சரியில்லை. ஹோட்டல் துவங்கிய சில ஆண்டுகள் கழித்து அதை டெய்லரான அம்ப்ரோசியஸ் ஹில்டல் என்பவர் வாங்கி நடத்தத் துவங்கினார்.
|
சைவம்
ஹில்டலின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் இனியும் டெய்லர் பணியை தொடர முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர் சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என அறிவுரை வழங்கினர். அதன் பிறகே அவர் அந்த ஹோட்டலை முழுமூச்சில் நடத்தத் துவங்கினார். 1903ம் ஆண்டு ஹில்டல் அந்த ஹோட்டலின் மேனேஜர் ஆனார். பின்னர் அதை அவர் தனது மனைவி மார்தாவின் உதவியுடன் வாங்கினார். தற்போது அந்த ஹோட்டலை ஹில்டல் குடும்பத்தின் நான்காம் தலைமுறையினர் நடத்தி வருகிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications