இதயம் வெடித்து இறந்த "ஃபூ".. வேதனையில் லட்சக்கணக்கான ரசிகர்கள்!!
உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்ற ‘ஃபூ’ உயிரிழந்தது.
வாஷிங்டன்: உலகின் அழகான நாய் என சமூகவலைதளங்களால் பெயரிடப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த நாய் உயிரிழந்தது.
அமெரிக்காவைச் சேர்ந்த பொமரேனியன் நாய் ஃபூ. உலகின் அழகிய நாய் என குறிப்பிடப்பட்ட ஃபூ பெயரில் சமூகவலைதளங்களில் தனிப் பக்கங்கள் தொடரப்பட்டுள்ளன. அதில், லட்சக்கணக்கானோர் அதனை பின்தொடர்ந்து வந்தனர்.
ஃபூ- வின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தினசரி அதில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதனால் சமூகவலைதளப் பக்கத்தில் ஃபூ மிகவும் பிரபலம்.

ஃபூ மரணம்:
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உறக்கத்திலேயே ஃபூ பரிதாபமாக உயிரிழந்தது. தற்போது 12 வயதான ஃபூ, இதயம் வெடித்து உயிரிழந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதயநோய்:
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஃபூவின் நெருங்கிய நண்பனாகா இருந்து வந்த புட்டி என்கிற நாய் உயிரிழந்தது. அது முதல் ஃபூ சோகமாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் தற்போது ஃபூவும் உயிரிழந்து விட்டது.

ரசிகர்கள் சோகம்:
ஃபூவின் மரணச் செய்தியால் அதன் ரசிகர்கள் பெரும் சோகமடைந்துள்ளனர். அதன் மறைவிற்கு தங்கள் இரங்கல்களை சமூகவலைதளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஃபூவின் உரிமையாளரும் தனது பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உருக்கமான பதிவு:
அதில் அவர், "கடந்த 2006ம் ஆண்டு ஃபூ எங்கள் வீட்டிற்கு வந்தது. அது முதல் உற்ற தோழனாக எங்கள் வீட்டில் ஒருவனாக அது இருந்தது. புட்டியின் மறைவிற்குப் பிறகு அது இதயம் சம்பந்தமான பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தது. தற்போது அது தன் நண்பனைச் சந்திக்க சென்று விட்டது. சொர்க்கத்தில் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள் என நினைக்கிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.

க்யூட் புகைப்படங்கள்:
இந்தப் பதிவில் ஃபூ-வின் தனிப்பட்ட அழகான புகைப்படங்கள் மற்றும் அது தன் நண்பன் புட்டியுடன் இருக்கும் சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அதனை ஃபூவின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications