இத்தாலியில் செத்துமடியும் மக்கள்.. மிக மோசமான நாள்.. ஒரே நாளில் 1000த்தை நெருங்கிய உயிரிழப்பு
ரோம்: இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 1000த்தை நெருங்கி உள்ளது. இது தான் உலகிலேயே ஒரு நாட்டில் இதுவரை பதிவான மோசமான அளவு உயிரிழப்பு எண்ணிக்கை ஆகும்.
Recommended Video
உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக உருவெடுத்துள்ளது. தினமும் அங்கு நிகழும் மரணங்கள் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. மருந்துகள் கண்டுபிடிக்கப்படாவிட்டால் பிணங்களை கூட அடக்கம் செய்ய முடியாத அளவுக்கு இத்தாலி நொடிந்து போய்விடும். அந்த அளவிற்கு பாதிப்பும், இறப்பும் அதிகரித்து வருகிறது.

ஐரோப்பாவின் 27 நாடுகளும் மோசமாக பாதிக்கப்பட்ட போதிலும் இத்தாலி மற்றும் ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள பாதிப்பு கொரோனா குறித்த அச்சத்தை உலகுக்கே விதைத்துள்ளது. இதுவரை இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் 86500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000த்தை நெருங்கி உள்ளது. இதன் மூலம் இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 10000த்தை தாண்டி உள்ளது.
ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்திகளின் படி நேற்று ஒரே நாளில் கொரோனாவால் இத்தாலியில் 919 பேர் இறந்தனர். பிப்ரவரி 21 அன்று இத்தாலியில் முதன்முதலாக கொரோனா பாதித்ததில் இருந்த மிக உச்சபட்ச உயிரிழப்பு இதுவே ஆகும். மார்ச் 21 அன்று 793 பேர் அதிகபட்சமாக இறந்தனர். ஆனால் நேற்று 919 பேர் இறந்துள்ளனர். வியாழக்கிழமை 712, புதன்கிழமை 683, செவ்வாயன்று 743 மற்றும் திங்களன்று 602 பேர் இத்தாலியில் இறந்தனர். ஒட்டுமொத்தமாக 10000 பேருக்கு மேல் இதுவரை இறந்துள்ளனர்.
உறுதிப்படுத்தப்பட்ட கொரோன வைரஸ் ழுழழுழு எண்ணிக்கை 80,539 இல் இருந்து 86,498 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில், நாடு முழுவதும் 10,950 பேர் வெள்ளிக்கிழமை நிலவரப்படி முழுமையாக குணமடைந்துள்ளனர். இத்தாலியில் லோம்பார்டின் தான் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உள்ள பகுதியாகம். அங்கு மோசமான சூழ்நிலை நிலவுகிறது. , மொத்தம் 5,402 பேர் இறந்துள்ளனர். 37,298 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications