அலர்ட் செய்த ரஷ்யா.. அமெரிக்க விமானப்படையில் திடீர் மாற்றம்! உச்சத்தை எட்டும் ஈரான் போர்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு குடிமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ரஷ்யா உத்தரவிட்டிருக்கிறது. மறுபுறம், நடுவானில் எரிபொருளை நிரப்பும் 30 அமெரிக்க விமானங்கள், சில மணி நேரங்களுக்கு முன்பு ஐரோப்பா நோக்கி புறப்பட்டிருக்கின்றன. இதை அனைத்தையும் ஒரு புள்ளியில் கனெக்ட் செய்தால், அடுத்த சில நாட்களில் ஈரான்-இஸ்ரேல் போர் உச்சத்தை தொடும் என்பது தெளிவாகிறது.

இந்த தகவலை Azernews செய்தி ஊடகம் வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க விமானப்படையை சேர்ந்த KC-135 மற்றும் KC-46 ரக விமானங்கள் ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இஸ்ரேலுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உதவி செய்கின்றன என்று ஏற்கெனவே ஈரான் குற்றம்சாட்டி வருகிறது. இப்படி இருக்கையில் அமெரிக்க போர் விமானங்களின் இந்த பயணம், ஈரானின் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

Russia Israel Iran

மேலோட்டமாக பார்த்தால் இந்த விஷயத்தில எந்த பிரச்சனையும் இல்லையே என்று கேட்க தோன்றலாம். ஏனெனில், இஸ்ரேல் விமானங்கள் ஈரானை தாக்க, நடுவில் எரிபொருளை நிரப்ப வேண்டியதில்லை. F-15 விமானங்களை எடுத்துக்கொள்ளுங்கள். இது ஒரே மூச்சில் ஈரானுக்கு அருகில் சென்று தாக்கிவிட்டு திரும்பும். ஆனால், மற்ற விமானங்களுக்கு இந்த கெப்பாசிட்டி கிடையாது. F-16 விமானங்களுக்கு கண்டிப்பாக இந்த உதவி தேவை.

இந்த விமானங்களை நடுவழியில் இறக்கியும் எரிபொருளை நிரப்ப முடியாது. ஏனெனில் இஸ்ரேலுக்கு உதவும் நாடுகள் மீதும் நாங்கள் போர் தொடுப்போம் என்று ஈரான் ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதனால் நடுவழியில் விமானத்தை தரையிறக்க முடியாது. ஆகவேத்தான் நடுவானில் எரிபொருளை நிரப்பும் டேங்கர் விமானங்களை இஸ்ரேல் நாடியுள்ளது.

அமெரிக்காவின் நடவடிக்கையால் எழுந்துள்ள இன்னொரு சந்தேகம் என்னவெனில், அமெரிக்க படைகளே நேரடியாக ஈரானில் போரில் பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது, போர் தொடங்கியபோது தங்கள் ராணுவ தளங்களில் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஈரானை அமெரிக்கா கேட்டுக்கொண்டிருந்தது. ஈராக்கில் அமெரிக்காவின் ராணுவ தளம் இருக்கிறது. இந்த தளத்தின் மீது, இஸ்ரேல் விமானங்கள் வைத்து தாக்குதல் நடத்திவிட்டு, அதை ஈராக்தான் செய்தது என்று அமெரிக்கா கதை கட்டி விடலாம்.

இதன் மூலம் அமெரிக்கா நேரடியாக இந்த தாக்குதலில் இறங்கலாம். இதற்காகக்கூட, நடுவானில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் தேவைப்பட்டிருக்கலாம். இதையெல்லாம் கனெக்ட் செய்து பார்த்துதான், ரஷ்யா தனது குடிமக்களை உடனடியாக இஸ்ரேலிலிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது. எகிப்து வழியாக வெளியேற 24*7 என முழுநேர உதவி செய்யப்பட்டிருப்பதாகவும் ரஷ்யா கூறியிருக்கிறது.

போர் இதே வேகத்தில் நடந்தால், நிச்சயம் ஈரான் அணு ஆயுதங்களை நோக்கி நகரவும் வாய்ப்பு இருக்கிறது. இது மட்டும் சாத்தியமானால் உலகம் முழுவதும் அணு ஆயுத போர் பரவும். இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையில் கூட இந்த போர் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+