"ஜீரோ எதிர்ப்பு.." புதிய சரித்திரம் படைக்கும் ஜி ஜின்பிங்.. 3வது முறையாக சீன அதிபராக பதவியேற்பு
எந்தவொரு பெரிய அரசியல் பின்புலமும் இல்லாமல் வந்த ஜி ஜின்பிங், இப்போது சீனாவின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார்.
பெய்ஜிங்: ஜி ஜின்பிங் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகச் சீன அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் இருந்த அத்தனை பேரும் அவருக்கு ஆதரவாகவே வாக்களித்தனர்.
உலகில் இப்போது வலிமையான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகச் சீனா இருக்கிறது. உலகின் வளர்ந்த நாடுகளும் கூட தங்களுக்குத் தேவையான பொருட்களில் பலவற்றைச் சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க.. மறுபுறம் சீனா பல நாடுகளுடன் கடந்த சில காலமாகவே மோதல் போக்கையே கொண்டுள்ளது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை பல நாடுகளுடன் மோதல் போக்கையே கொண்டிருக்கிறது.

ஜி ஜின்பிங்
இந்தச் சூழலில் இப்போது சீன அதிபராக ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாகப் பதவியேற்றார்.. சீன வரலாற்றில் பல தலைமுறைகளுக்குப் பிறகு, ஒருவர் மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு வந்துள்ளார். அங்கு மிகவும் வலிமையான நபர்களில் ஒருவராக ஜி ஜின்பிங் தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளார். கடந்த அக். மாதம் தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ஜி ஜின்பிங் மேலும் 5 ஆண்டுகள் நியமிக்கப்பட்ட நிலையில், சீனா நாடாளுமன்றம் அவரை இன்று அதிபராக நியமித்துள்ளது.

எதிர்ப்பாளர்கள் இல்லை
அதேபோல சீன ராணுவத்தின் தலைவராகவும் ஜி ஜின்பிங் நியமிக்கப்பட்டார். சீன அதிபர் ஜின்பிங் கடைசி சில ஆண்டுகளில் சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த ஒரு தலைவராகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டார். தனக்கு எதிரானவர்களை பக்காவாக பிளான் செய்து தூக்கினார். கட்சிக்குள்ளே இருக்கும் எதிர்ப்பாளர்களை ஊழல் ஒழிப்பு நடவடிக்கை என்று கூறி தூக்கினார். அதேபோல கட்சியில் இருக்கும் முக்கிய பதவிகளில் தனது ஆதரவாளர்களைப் பார்த்துப் பார்த்து நியமித்துக் கொண்டார்.

மக்கள் ஆதரவு கம்மி தான்
இதன் காரணமாகவே அவர் கடந்த அக். மாதம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட போது எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல் இருந்தது. அரசியல் அரங்கில் எதிர்ப்பு இல்லை என்ற போதிலும், மக்கள் அரங்கில் ஜி ஜின்பிங் மீதான எதிர்ப்பு மக்கள் மன்றத்தில் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. 69 வயதான ஜி ஜின்பிங் எதிராகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் போராட்டம் நடத்தினர். சீனாவில் சில மாதங்களுக்கு முன்பு வரை கடுமையான ஜீரோ கோவிட் கொள்கை அமலில் இருந்தது.

மீண்டும் தலைவராக
இதனால் தங்கள் தொழில்கள் பாதிப்பதாகக் கூறி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். சீனாவில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதெல்லாம் அரிதினும் அரிதான செயலாகும். அப்போதே ஜின்பிங்கை அதிபர் பொறுப்பில் இருந்து நீக்கவும் சில கோரிக்கைகள் எழுந்தன. இருப்பினும், அந்த போராட்டத்தை எல்லாம் தவிர்த்து ஜி ஜின்பிங் மீண்டும் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எந்தவொரு எதிர்ப்பும் இல்லாமல் ஜி ஜின்பிங் முழு ஆதரவுடன் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஜீரோ எதிர்ப்பு
சீன நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து 2,952 வாக்குகளும் எதிர்பார்த்தபடியே ஜி ஜின்பிங்கிற்கு ஆதரவாகவே விழுந்தது. இதையடுத்து ஜி ஜின்பிங் ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவர் பதவியேற்கும் நிகழ்வு நாடு முழுக்க டிவிக்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. எந்தவொரு பெரிய அரசியல் பின்புலமும் இல்லாமல் வந்த ஜி ஜின்பிங் இப்போது உலகின் டாப் நாடுகளில் ஒன்றின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார்.

புது சாதனை
அவருக்கு எந்தவொரு எதிர்ப்பும் வராதபட்சத்தில், இன்னும் சில ஆண்டுகள் அவர் அதிபர் பதவியில் இருந்தால், சீனாவில் மிக நீண்ட காலம் அதிபர் பதவியில் இருந்த நபர் என்ற சாதனையைப் படைப்பார். ஏற்கனவே அவர் தனது எதிர்ப்பாளர்களை காலி செய்துவிட்ட நிலையில், இது நடக்க வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவுக்கும் உலகின் பல நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரிக்கும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications