Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஹமாஸ் தலைவர் சின்வார் இறந்துவிட்டார்.. உலகத்துக்கே நல்ல நாள்”.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகிழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இஸ்ரேல் படையால் கொல்லப்பட்ட நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இறந்துவிட்டார். இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும், ஒட்டுமொத்த உலகிற்கும் நல்ல நாள்" என்று தெரிவித்துள்ளார் ஜோ பைடன்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார், காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் நேற்று கொல்லப்பட்டார். இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். அதில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரும் ஒருவர் எனத் தெரியவந்தது.

Yahya Sinwar s Death Is a Good Day for Israel the US and the World Says President Joe Biden

யாஹ்யா சின்வார் பலி: இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் காசாவில் நடந்த தாக்குதலில் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக அறிவித்தார். படுகொலைகளுக்குப் பின்னால் இருந்த மூளையான சின்வார் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டதாகவும், இது இஸ்ரேல் ராணுவத்தின் முக்கியமான சாதனை என்றும் காட்ஸ் தெரிவித்தார். பல் வரிசை அமைப்பு மற்றும் டி.என்.ஏ ஆய்வுகளின் படி, இறந்தது சின்வார் என உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை ஹமாஸ் படையினர் மறுத்துள்ளனர். தங்கள் தலைவர் உயிருடன் இருப்பதாக கூறி உள்ளனர். எனினும், சின்வார் உயிருடன் இருப்பதற்கான எந்தவித ஆதாரங்களையும் ஹமாஸ் படையினர் வெளியிடவில்லை. எனவே. சின்வார் உயிரிழந்துள்ளதாகவே தெரிகிறது.

ஜோ பைடன் மகிழ்ச்சி: இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் ஜோ பைடன் வெளியிட்டுள்ள பதிவில், "ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் இறந்துவிட்டார். இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும், ஒட்டுமொத்த உலகிற்கும் நல்ல நாள்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காசாவில் நடத்திய தாக்குதலின் மூலம் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இன்று அதிகாலை இஸ்ரேலிய அதிகாரிகள் எனது தேசிய பாதுகாப்புக் குழுவுக்குத் தெரிவித்தனர். டிஎன்ஏ சோதனைகள் மூலம் தற்போது சின்வார் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகத்துக்கே நல்ல நாள்: இது இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும், உலகிற்கும் ஒரு நல்ல நாள். ஹமாஸ் என்ற பயங்கரவாதக் குழுவின் தலைவராக இருந்த சின்வார், 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் குடிமக்களின் மரணத்திற்கு காரணமாக இருந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த படுகொலைகள், கற்பழிப்புகள் மற்றும் கடத்தல்களுக்கு மூளையாகச் செயல்பட்டார் சின்வார். அவரது உத்தரவின் பேரில் தான் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலை ஆக்கிரமித்து சொல்ல முடியாத காட்டுமிராண்டித்தனத்துடன் - பொதுமக்களையும், குழந்தைகளை அவர்களின் பெற்றோருக்கு முன்பாகவும், பெற்றோரை தங்கள் குழந்தைகளுக்கு முன்பாகவும் கொன்று படுகொலை செய்தனர்.

சின்வார் தான் காரணம்: அந்த நாளில் 46 அமெரிக்கர்கள் உட்பட 1,200 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் 250க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். 101 பேரைக் காணவில்லை. காணாமல் போனவர்களில் ஏழு அமெரிக்கர்களும் அடங்குவர், அவர்களில் நான்கு பேர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், ஹமாஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. சின்வார் தான் இதற்கெல்லாம் பொறுப்பு.

அக்டோபர் 7 படுகொலைகளுக்குப் பிறகு, காசாவில் பதுங்கியிருக்கும் சின்வார் மற்றும் பிற ஹமாஸ் தலைவர்களைக் கண்டுபிடித்து கண்காணிக்க உதவுவதற்காக இஸ்ரேலிய படையினருடன் இணைந்து செயல்படுமாறு சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் எங்கள் உளவுத்துறை நிபுணர்களுக்கு நான் உத்தரவிட்டேன்.

நெதன்யாகுவிடம் பேசுவேன்: 2011ல் ஒசாமா பின்லேடனைக் கொல்ல அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்ட பிறகு அமெரிக்கா முழுவதும் காணப்பட்ட காட்சிகளைப் போன்றே எனது இஸ்ரேலிய நண்பர்களுக்கு இது நிம்மதியான நாள் என்பதில் சந்தேகமில்லை. ஹமாஸ் படையினரை முற்றிலுமாக அகற்ற இஸ்ரேலுக்கு முழு உரிமையும் உள்ளது.

ஹமாஸால் இனியொரு அக்டோபர் 7 சம்பவத்தை நடத்த முடியாது. நான் விரைவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் பிற இஸ்ரேலிய தலைவர்களுடன் பேசுவேன். அவர்களை வாழ்த்தி, பணயக்கைதிகளை அவர்களது குடும்பத்தினரிடம் அழைத்து வருவதற்கான வழியைப் பற்றி ஆலோசிப்பேன். அப்பாவி மக்களுக்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ள இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன்.

தடை தீர்ந்தது: காசாவில் ஹமாஸ் அதிகாரத்தில் இல்லாத ஒரு நாள் வந்துள்ளது. இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை வழங்கும் அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு இப்போது உள்ளது. அந்த இலக்குகள் அனைத்தையும் அடைய யாஹ்யா சின்வார் ஒரு தீர்க்க முடியாத தடையாக இருந்தார். அந்தத் தடை இப்போது இல்லை. இப்போது நிறைய வேலைகள் நம் முன் உள்ளன." என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+