இஸ்ரேலுடன் சேர்ந்தால் அவ்வளவுதான்.. அமெரிக்காவை மிரட்டி ஈரானுக்கு சப்போர்ட்டாக வந்தது யாரு பாருங்க

Subscribe to Oneindia Tamil

சனா: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடும் மோதல் நடந்து வுருகிறது. இது 9 வது நாளை எட்டி உள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், செங்கடலில் உள்ள அமெரிக்க கப்பல்களை குறிவைத்து தாக்குவோம் என்று ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு அமைப்பான ஹவுதி கடும் வார்னிங் செய்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருநாடுகளும் மாறி மாறி ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இதில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளது. இன்னும் நேரடியாக இஸ்ரேலுடன் அமெரிக்கா கைகோர்க்கவில்லை. மறைமுகமாக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.

இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்துவது பற்றி இன்னும் 2 வாரங்களில் முடிவு செய்யப்படும். இது நடக்கலாம். நடக்காமலும் போகலாம். என்னை பொறுத்தவரை இஸ்ரேலிடம் ஈரான் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார்.

இதற்கிடையே தான் ஈரானுக்கு அனைத்து வகையான சப்போர்ட்டும் அளிப்போம் என்று லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹெஸ்புல்லாக்கள் அறிவித்தன. இதன் தொடர்ச்சியாக தற்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இஸ்ரேல், ஹமாஸ் அமைப்புக்கு எதிராக காசாவில் போர் புரிந்து வருகிறது. இதையடுத்து செங்கடலில் இஸ்ரேல், அமெரிக்க கப்பல்களை குறிவைத்து ஹவுதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கோபமடைந்த அமெரிக்கா சமீபத்தில் ஹவுதிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.

கடந்த மே மாதத்தில் ஹவுதிகள் மீது அமெரிக்கா போர் கப்பல்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த மோதல் மே மாதம் முடிவுக்கு வந்தது. செங்கடலில் அமெரிக்க கப்பல்களை தாக்கமாட்டோம் என்று ஹவுதிகள் கூறியதை தொடர்ந்து மோதல் முடிவுக்கு வந்தது. இப்போது இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா, ஈரானை தாக்கினால் செங்கடலில் அமெரிக்காவின் கப்பல்களை குறிவைப்போம் என்று ஹவுதிக அமைப்பு மிரட்டி உள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் இன்று 9 வது நாளை எட்டி உள்ளது. இருநாடுகளும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தினாலும் கூட இஸ்ரேலை விட ஈரானுக்கு தான் சேதம், உயிர் பலி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இருநாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் வெளிநாட்டுப் பிரிவான குட்ஸ் படையின் பாலஸ்தீனத்துக்கான தலைவராக இருந்த சயீத் இசாதி கொல்லப்பட்டார். இவர் ஈரானின் கோம் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் இஸ்ரேல் தீர்த்து கட்டியது. இவர் தவிர ஏற்கனவே ஈரானின் பல படை தளபதிகள், அணுசக்தி தொடர்பான விஞ்ஞானிகள் இஸ்ரேலால் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+