பாகிஸ்தானில் யோகா மையத்திற்கு தீ வைத்த விஷமிகள்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் யோகா மையம் ஒன்றுக்கு விஷமிகள் தீ வைத்த சம்பவம் நடந்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் உள்ள பனி கலா பகுதியில் யோகா மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த மையத்திற்குள் இன்று நுழைந்த சிலர் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்களுக்கு மையத்தில் உள்ளவர்கள் பணம் கொடுக்க மறுத்தனர். இதையடுத்து அந்த நபர்கள் யோகா மையத்திற்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் கடந்த 2012ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றார். அப்போது அவர் பனி கலாவில் தனது வாழும் கலை அமைப்பின் மையம் ஒன்றை துவங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் கட்டாய மதமாற்றத்திற்கு பயந்து வாழும் நிலையில் யோகா மையம் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+