"ரஷ்ய அதிபர் புதின் சீக்கிரம் செத்து போவார்.." வெடியை வீசிய ஜெலன்ஸ்கி! ஏன் அப்படி சொன்னார் தெரியுமா
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து வருகிறது. இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு பக்கம் அமெரிக்கா தீவிரமாக முயன்று வருகிறது. அதேநேரம் மறுபுறம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ச்சியாக ரஷ்யாவை விமர்சித்து வருகிறார். இந்தச் சூழலில் தான் ரஷ்ய அதிபர் புதின் சீக்கிரம் உயிரிழந்துவிடுவார் என்று ஜெலன்ஸ்கி கூறியது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்த போரால் சர்வதேச அளவிலும் கூட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் போர் தொடர்ந்தே வருகிறது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
இதற்கிடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் தி கீவ் இன்டிபென்டன்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ரஷ்ய அதிபர் புதின் சீக்கிரம் உயிரிழந்துவிடுவார் எனக் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. புதின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் அவருக்கு கேன்சர் இருப்பதாகவும் தகவல்கள் பரவி வரும் நிலையில், ஜெலன்ஸ்கி இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மத்தியஸ்தத்தைத் தொடர்ந்து பகுதி போர் நிறுத்தம் செய்ய ரஷ்யாவும் உக்ரைனும் சில நாட்களுக்கு முன்பு தான் ஒப்புக்கொண்டது. இந்தச் சூழலில் தான் திடீரென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திடீரென இந்த கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இப்போத சர்வதேச அரங்கில் ரஷ்யா தனித்துவிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் புதினுக்கு அமெரிக்கா உதவக்கூடாது.. அதுதான் மிகவும் முக்கியம். இது ஆபத்தானது என்று நான் நினைக்கிறேன். உலகிற்கே மிகவும் ஆபத்தான தருணங்களில் ஒன்றாகும்..
புதின் திட்டம் இதுதான்
புதினை பொறுத்தவரை அவரது திட்டம் ரொம்பவே எளிமையானது. சாகும் வரை அதிபர் பதவியில் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். வெறும் உக்ரைன் மட்டும் அவரது இலக்கு இல்லை.. ஒட்டுமொத்த மேற்குலக நாடுகளையும் அவர் குறிவைத்துள்ளார். இதனால் புதினுக்கு அழுத்தம் கொடுப்பதில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஏனென்றால் புதின் ஐரோப்பிய- அமெரிக்க கூட்டணிக்கு அஞ்சுகிறார். இந்த கூட்டணியை உடைக்கவே புதின் விரும்புகிறார்.
புதின் உயிரிழப்பார்
மேலும், எங்கு உயிரிழந்துவிடுவோமோ என்றும் புதின் அஞ்சுகிறார். அவர் விரைவில் இறந்துவிடுவார்.. அது தான் ஒரு உண்மை. அது நடந்தால் எல்லாமே ஓவர். அதேநேரம் இந்த இடத்தில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் அமெரிக்காவின் உதவிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்..
எங்களைப் பற்றி ரஷ்யா தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறது. ஆனால், அதை எதிர்த்து நாங்கள் போராடுவோம். ரஷ்யா எப்படி இந்த பொய்களைப் பரப்ப முயன்றாலும் அதை எதிர்த்துப் போராடுவோம். எங்களுக்கு வேறு வழியும் இல்லை. இந்தச் சூழலில் நாம் செய்யக்கூடிய ஒரே விஷயம், தொடர்ந்து உண்மையைப் பரப்புவதுதான். போர்க்களத்தில் நமக்காக நாம் போராடுகிறோம் என்பதை உதாரணங்களுடன் நிரூபிக்க வேண்டும்" என்றார்.
ஜெலன்ஸ்கி இப்படி சொல்ல என்ன காரணம்
புதின் உடல்நிலை குறித்த ஜெலன்ஸ்கியின் கருத்துகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதேநேரம் புதின் உடல்நிலை தொடர்பாகக் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் அவர் விரைவில் உயிரிழக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications