"ரஷ்ய அதிபர் புதின் சாகணும்!" போர் நிறுத்தத்திற்கு ஓகே சொன்ன நாளிலேயே.. உக்ரைன் அதிபர் பரபரப்பு!
மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் பல ஆண்டுகள் தொடர்வது அனைவருக்கும் தெரியும். இந்த போர் இப்போது முடிவுக்கு வருவது போன்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உயிரிழக்க வேண்டும் என்பதே இப்போது ஒட்டுமொத்த உக்ரைனின் விருப்பமாக இருப்பதாக ஜெலன்ஸ்கி கூறியிருக்கிறார்.
ரஷ்யா உக்ரைன் இடையே போரை முடிவுக்குக் கொண்டு டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். இதற்கிடையே போர் நிறுத்தம் செய்ய உக்ரைன் சம்மதம் தெரிவித்துவிட்டதாக இன்று காலை செய்திகள் வெளியாகி இருந்தது. இதன் மூலம் ஆண்டு கணக்கில் தொடர்ந்த போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

புதின் சாகணும்
இதற்கிடையே உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ள கருத்துகள் இப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மரணத்தை விரும்புவதாக அவர் மறைமுகமாகச் சொல்லியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கிறிஸ்துமஸ் நாளில் வாழ்த்து சொல்லி அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில் இந்தக் கருத்துகள் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக அவர் மேலும், "ரஷ்யா ஏற்படுத்திய துயரங்கள் மத்தியிலும் எங்கள் உக்ரைன் மக்களின் இதயம், ஒருவருக்கொருவர் நம்பிக்கை, ஒற்றுமை ஆகியவற்றைக் கொண்டு இருக்கிறது. இதை யாராலும் கைப்பற்றவோ, குண்டுவீசி அழிக்கவோ முடியாது" என்றார். புதினின் பெயரைக் குறிப்பிடாமலே அவர் மேலும், "இன்று நாம் அனைவருக்கும் ஒரே கனவு உள்ளது. ஒரே ஒரு விருப்பம்: 'அவன் அழிந்து போகட்டும்' என்று அனைவரும் தங்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள்" என்றார்.
சர்ச்சை
ஜெலன்ஸ்கி மேலும், "இறைவனைப் பார்த்து, உக்ரைனுக்கு அமைதியைக் கோருகிறோம். அதற்காகப் போராடுகிறோம், பிரார்த்திக்கிறோம். அதற்குத் தகுதியானவர்களாகவே நாங்கள் இருக்கிறோம்" என்றார். ரஷ்யா கிறிஸ்துமஸ் ஈவ் சமயத்தில் நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களில் மூவர் உயிரிழந்து, மின் தடைகள் ஏற்பட்டது. இந்தத் தாக்குதல் நடந்து கொஞ்ச நேரத்தில் ஜெலன்ஸ்கியின் இந்த கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி வெளியானது.
இந்தத் தாக்குதல் பற்றிப் பேசிய ஜெலன்ஸ்கி, "கிறிஸ்துமஸ் ஈவ் அன்று ரஷ்யர்கள் மீண்டும் தங்கள் உண்மையான முகத்தைக் காட்டினர். மோசமான குண்டுவீச்சு, நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் என அனைத்தும் பயன்படுத்தப்பட்டன. மனிதாபிமனம் இல்லாதவர்கள் இப்படித்தான் தாக்குகிறார்கள்" என அவர் கண்டித்தார்.
போர் நிறுத்தம்
போரை முடிவுக்குக் கொண்டு வரும் 20 அம்சத் திட்டம் குறித்தும் ஜெலென்ஸ்கி முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழில்துறை மண்டலமாக டான்பாஸ் பகுதியிலிருந்து படைகளை வாபஸ் பெற உக்ரைன் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், ரஷ்யப் படைகள் முதலில் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அப்பகுதி சர்வதேசப் படைகளால் கண்காணிக்கப்படும் ராணுவமற்ற பகுதியாக மாறினால் மட்டுமே இது சாத்தியம் என்றும் அவர் விளக்கினார்..
ரஷ்யா உக்ரைன் இடையேயான இந்த அமைதி பேச்சுவார்த்தையில் டான்பாஸ் பிராந்தியம் தான் முட்டுக்கட்டையாக இருக்கிறது. அந்த பகுதியை யார் கட்டுப்படுத்துவது என்பதில் உடன்பாடு இல்லாத நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அது முட்டுக்கட்டையை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் தான் அந்த பகுதி சர்வதேச படைகளால் கண்காணிக்கப்பட்டாலும் ஓகே என ஜெலன்ஸ்கி கூறியிருக்கிறார். இது அவர் சமரசத்திற்கு ரெடி என்பதன் அறிகுறியாகும்.
என்ன செய்யலாம்
அதேபோல இப்போது ரஷ்யா கட்டுப்பாட்டில் இருக்கும் சப்போரிஜியா அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதியையும் சர்வதேச படைகள் கண்காணிப்பிற்கு ஒப்படைக்க வேண்டும் என்ற அவர், எந்தச் சமாதானத் திட்டமும் பொது வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.
அதேசமயம் ரஷ்யா இதுவரை இதற்கு மவுனமாகவே இருக்கிறது. டான்பாஸ் பகுதியின் பெரும்பான்மையான லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க் மாகாணத்தின் 70% ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், அந்தப் பகுதிகளை ரஷ்யா விட்டு தருமா என்பதில் கேள்வியே இருக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications