தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்! தந்தையின் மெழுகு சிலை முன் திருமணம் செய்த பெண்! நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தந்தை மீது கொண்ட பாசத்தினால் அவரது மெழுகு சிலை முன்பு பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டு ஆசீர்வாதம் பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Recommended Video

    தந்தையின் மெழுகு சிலை முன் திருமணம் செய்த பெண் - வீடியோ

    ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களின் மகன், மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதை விரும்புகின்றனர். அதேபோல் இல்லற வாழ்க்கையை பெற்றோரின் ஆசீர்வாதத்தோடு துவக்க ஒவ்வொரு இளைஞர், இளம்பெண்கள் ஆசைப்படுகின்றனர்.

    இந்த ஆசை பெரும்பாலானவர்களுக்கு நிறைவேறினாலும் கூட தாய், தந்தையின் எதிர்பாராத மரணங்களினால் சிலருக்கு கைக்கூடாத நிலை ஏற்படுகிறது.

    மெழுகு சிலை முன்பு திருமணம்

    மெழுகு சிலை முன்பு திருமணம்

    இத்தகைய குறையை போக்கும் வகையில் தான் தற்போது மெழுகு சிலை முன்பு திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. அதாவது இறந்துபோன தங்களின் தாய், தந்தையை மெழுகு சிலையாக வடிவமைத்து அதன் முன்பு இளைஞர்கள், இளம்பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் நெகிழ்ச்சி சம்பவங்கள் தற்போது நடந்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு நெகிழ்ச்சியான திருமணம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

    இறந்த தந்தை

    இறந்த தந்தை

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி. இவருடைய கணவர் செல்வராஜ் (வயது 56). இந்த தம்பதியின் மகள் மகேஸ்வரி. இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் செல்வராஜ் உடல்நலக்குறைவால் கடந்தாண்டு மார்ச் மாதம் 3ம் தேதி உயிரிழந்தார்.

    தந்தை இல்லையே என வருத்தம்

    தந்தை இல்லையே என வருத்தம்

    இந்நிலையில் மகேஸ்வரிக்கு திருக்கோவிலூரில் அச்சகம் வைத்து நடத்தி வரும் ஜெயராஜ் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மகேஸ்வரியின் திருமணத்தை முன்னிருந்து வெகுவிமரிசையாக நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவர் இறந்த நிலையில் திருமணத்தை பார்க்க தந்தை செல்வராஜ் இல்லையே என மகேஸ்வரி மற்றும் குடும்பத்தினர் கவலைப்பட்டனர். குறிப்பாக தந்தை மீது அதிக பாசம் கொண்ட மகேஸ்வரி தனது திருமணத்துக்கு தந்தை இல்லையே என சோகத்தில் இருந்துள்ளார்.

    ரூ.5 லட்சத்தில் மெழுகு சிலை

    ரூ.5 லட்சத்தில் மெழுகு சிலை

    இதனால் செல்வராஜை போன்று சிலை செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து ரூ.5 லட்சம் செலவில் பத்மாவதி மற்றும் குடும்பத்தினர் செல்வராஜின் மெழுகு சிலையை தயாரித்தனர். பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து அமர்ந்து இருப்பதுபோல் மெழுகுசிலை தத்ரூபமாக உருவாக்கப்பட்டு இருந்தது.

     சிலை முன்பு திருமணம்

    சிலை முன்பு திருமணம்

    இந்நிலையில் மகேஸ்வரி-ஜெயராஜ் திருமணம் இன்று நடந்தது. அப்போது செல்வராஜ் சிலை முன்பு திருமண சடங்குகள் நடந்தன. செல்வராஜ் சிலையுடன் பத்மாவதி நிற்க மணமக்கள் அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். மகேஸ்வரி தனது தந்தை செல்வராஜியின் மெழுகுசிலையை பார்த்து கண்ணீர் விட்டார். இதை கண்டு திருமண மண்டபத்துக்கு வந்த உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+