காஞ்சிபுரத்தில் ஷாக்.. ஒரே மருத்துவ கல்லூரி மாணவர்கள் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 52 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகள் விடுதி உடனடியாக மூடப்பட்டது. மருத்துவக் கல்லூரிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் அதே மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும்அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 50,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 251 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய அரசு உத்தரவு

மத்திய அரசு உத்தரவு

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மக்களிடம் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து விஸ்வரூபமெடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக 1500-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

52 மாணவர்களுக்கு தொற்று உறுதி

52 மாணவர்களுக்கு தொற்று உறுதி

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 52 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முதன்முதலில் விடுதியில் தங்கி இருக்கும் 6 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு மொத்தம் 40 மாணவர்களுக்கு தொற்று பாதித்துள்ளது தெரியவந்தது. தொடர்ந்துமாணவர்கள் அனைவரிடமும் பரிசோதனை செய்தபோது இதுவரை சுமார் 52 முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

விடுதிகள் மூடப்பட்டன

விடுதிகள் மூடப்பட்டன

இதில் மாணவிகள் சிலரும் அடங்குவார்கள். பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் அதே மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகள் விடுதி உடனடியாக மூடப்பட்டது. மருத்துவக் கல்லூரிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் பல மாணவர்களின் பரிசோதனை முடிவுகள் வர உள்ளதால் தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+