"மாப்பிள்ளையை வர சொல்லுங்க".. தாலி கட்டும் கடைசி நொடியில் "விபரீத" சம்பவம்.. வெலவெலத்த மணப்பெண்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் திருமணம் ஒன்றில் நேற்று நடத்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டில் உள்ள குமிழி கிராமத்தை சேர்ந்தவர்கள் உமாபதி , மகாலட்சுமி. இவர்களின் மகன் சதீஷ் குமாருக்கு நேற்று திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

செங்கல்பட்டை சேர்ந்த திருநாவுக்கரசு நிர்மலா தம்பதிகளின் மகள் திவ்யாவுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக தீவிரமாக பணிகள் நடந்து வந்தன.

திருமணம்

திருமணம்

வீட்டில் பார்த்து ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் இது. இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது. பொதுவாக வீட்டில் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணங்களில் நிச்சயத்திற்கு பின்பே மணமகன் - மணமகள் உரையாடுவார்கள். இரண்டு பேரும் ஒருவரை ஒருவரை புரிந்துகொள்ள இந்த காலகட்டமே உதவும். ஆனால் சதிஷ்குமார் அந்த பெண்ணிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். திவ்யா மீது நாட்டம் இல்லாமல் இருந்திருக்கிறார் .

திவ்யா

திவ்யா

இதை திவ்யா ஒரு முறை நேரடியாக இரண்டு வீட்டாரிடமும் கூறி உள்ளார். உங்கள் மகன் என்னிடம் சரியாக பேசுவதே இல்லை. அவருக்கு திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா? இல்லையா? என்று கேட்டுள்ளார். அவ்வப்போது இரண்டு தரப்பினரும் சேர்ந்து இதை பற்றி பேசி சமாதானம் செய்துள்ளனர். இதையடுத்து நேற்று திருமணம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டது. திருப்போரூர் அருகே உள்ள மண்டபம் ஒன்றில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

 மாப்பிள்ளை

மாப்பிள்ளை

ஆனால் மாப்பிள்ளை மட்டும் திருமண கலையே இல்லாமல் சோகமாக இருந்துள்ளார். இந்த நிலையில்தான் சரியாக தாலி கட்டுவதற்கு 20 நிமிடத்திற்கு முன் மாப்பிள்ளையை தேடினால் அவர் அறையில் இல்லை. மாப்பிள்ளை சதீஷ் குமார் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் அங்கிருந்து தப்பித்து வெளியே ஓடி இருக்கிறார். இந்த சம்பவம் அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு வீட்டாரும் மாறி மாறி மண்டபம் முழுக்க தேடியும் மாப்பிளையை கண்டுபிடிக்க முடியவில்லை.

பெண் அழுகை

பெண் அழுகை

மணமேடையில் தனியாக அமர்ந்து இருந்த பெண் அங்கேயே கண்ணீர்விட்டு கதறி அழுதார். ஓ என்று அவர் அழுததை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்தனர். மாப்பிள்ளை சதீஷ் குமாருக்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் காதல் இருந்துள்ளது. இதனால்தான் அவர் திருமணம் செய்ய விருப்பமின்றி அங்கிருந்து ஓடிவிட்டார். அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை என்று கூறப்படுகிறது. பெண் குடும்பம் வசதியானது என்பதால், இந்த திருமணத்தை நடத்த மாப்பிள்ளை வீட்டார் அழுத்தம் கொடுத்துள்ளனர். இதன் காரணமாகவே மாப்பிள்ளை திருமண நாளில் தப்பித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+