மாமல்லபுரம் தர்காவில் சந்தன கூடு திருவிழா! மெரூன் ஜிப்பா, கருப்பு மாஸ்கில் வந்த "பெரியோனே ரஹ்மானே"
காஞ்சிபுரம்: மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் உள்ள தர்காவில் சந்தன கூடு திருவிழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
சந்தன கூடு திருவிழா என்பது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு முக்கியமான திருவிழாவாகும். இது பிரசித்தி பெற்ற தர்காக்களில் நடைபெறும். இங்கு கலந்து கொண்டு பல இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்வர். இதற்காக மலர்களை வாங்கிச் செல்வர்.

இந்த சந்தன கூடு திருவிழா ஆந்திரா மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் பெரிய தர்கா, நாகூர் தர்கா, சென்னை அண்ணா சாலை உள்ளிட்ட தர்காக்களில் நடைபெறும். இந்த சந்தன கூடு திருவிழா எந்த மாநிலத்தில் நடந்தாலும் அதன் அண்டை மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் செல்வதுண்டு.
இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறும். கடந்த 2019, 2020 ஆம் ஆண்டுகளில் கொரோனா தாக்கத்தை அடுத்து பக்தர்கள் குறைந்த அளவில் அனுமதிக்கப்பட்டார்கள். இதையடுத்து 2021 ஆம் ஆண்டு முதல் சந்தன கூடு திருவிழா வழக்கம் போல் நடந்து வருகிறது. இந்த நிலையில் மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலியில் உள்ள தர்காவிலும் சந்தன கூடு திருவிழா நடந்தது.
இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு அமைதியான முறையில் பிரார்த்தனை செய்தார். அவர் தலையில் காவி நிறத்தில் குல்லாவையும் முகத்தில் கருப்பு நிற மாஸ்க்கையும் அணிந்திருந்தார். மேலும் அவர் மெரூன் நிறத்தில் ஷைனிங் ஜிப்பா அணிந்திருந்தார். அமைதியான முறையில் பிரார்த்தனை செய்துவிட்டு வீடு திரும்பினார்.
எந்த விழாவுக்கு சென்றாலும் எளிமையாக இருப்பார். நாகையில் கந்தூரி திருவிழாவின் போது ஆட்டோ ரிக்ஷாவில் வந்து பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications