அத்தி வரதர் தரிசனம் இன்று 8 மணி நேரம் ரத்து .. கலெக்டர் பொன்னையா முக்கிய அறிவிப்பு
காஞ்சிபுரம்: காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனம் இன்று 8 மணி நேரம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.
காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் அருள்பாலித்து வருகிறார். நாளை அத்திவரதர் தரிசனம் நிறைவு பெற உள்ளது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து கொண்டிருக்கிறார்ர்கள். முதல் 31 நாட்கள் சயனகோலத்தில் அத்திவரதர் காட்சி அளித்தார். கடந் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நின்றகோலத்தில் காட்சி அளித்து வருகிறார்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று (வியாழக்கிழமை) ஆடி கருடசேவையையொட்டி நண்பகல் 12 மணிக்கு அத்திவரதர் தரிசனத்திற்கான கிழக்கு கோபுர வாயில் மூடப்படுகிறது. விஐபி தரிசன வாயிலும் பிற்பகல் 12 மணிக்கு அடைக்கப்படும். உள்ளே சென்ற பக்தர்கள் மாலை 5 மணிக்குள் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியேற வேண்டும். மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை கருடசேவை விழா நடைபெறும். இதனைத் தொடர்ந்து 8 மணிக்கு மேல் மீண்டும் தரிசனம் தொடர்ந்து நடைபெறும். கடைசி நாளான நாளையும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும்.
பொது தரிசனத்தில் செல்லக்கூடிய பக்தர்கள் மட்டும் மாலை 5 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து 17ம் தேதி அனைத்து தரிசனமும் முழுமையாக ரத்து செய்யப்படும். இதுவரை அத்திவரதரை 85 லட்சத்து 80 ஆயிரம் பக்தர்கள் தரிசித்துள்ளனர்.
வருகிற 17-ந்தேதி மந்திரங்கள் ஓதப்பட்டு அத்திவரதர் சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் பத்திரமாக வைக்கப்படும். கோவில் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்திவரதரை எடுத்து செல்ல மூங்கில் பலகைகள் அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications