Athi Varadar: அத்தி வரதரை தரிசிக்க உகந்த நாள்கள் எவை..? எப்போது கூட்டம் அதிகமாக இருக்கும் தெரியுமா!

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: அத்தி வரதரை தரிசிக்க இனி வரும் உகந்த நாள்கள் குறித்து எப்போது கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

Recommended Video

    அத்திவரதரை காண பெருகும் கூட்டம்... பக்தர்களுக்கான வரிசை 7 ஆக அதிகரிப்பு...

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் மூலவரான அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்கு பின் அனந்த சரஸ் குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    கடைசியாக 1979ம் ஆண்டு அத்தி வரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கிய இந்த விழா வரும் ஆகஸ்ட் 17ம் தேதி வரை நடைபெறுகிறது.

    பக்தர்கள் வருகை

    பக்தர்கள் வருகை

    40 வருடத்துக்கு ஒருமுறை வரும் அத்தி வரதரான பெருமாளை வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசித்துவிட வேண்டும் என எண்ணி உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் நாள் தோறும் காஞ்சிபுரம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

    கூட்டம் அதிகமாக இருக்கும்

    கூட்டம் அதிகமாக இருக்கும்

    வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசிக்க உள்ளார். இதனால் அத்திவரதரை தரிசிக்க அன்றைக்கு கூட்டம் மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பெருமாளுக்கு உகந்தது

    பெருமாளுக்கு உகந்தது

    பொதுவாக பெருமாளுக்கு உகந்த நாள் என்றால் சனிக்கிழமையாகும். இந்த வாரம் ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமை என்பதோடு ஆடிபெருக்கு என்பதால் அன்றைக்கு பெரிய அளவில் பக்தர்கள் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு ஆகஸ்ட் 10 ம் தேதி சனிக்கிழமையும் ஆகஸ்ட் 11ம் தேதி ஞாயிற்றுகிழமையும் என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஆகஸ்ட் 11ம் தேதி ஏகாதேசி நாள் ஆகும். எனவே அன்றைக்கு பக்தர்கள் கூட்டம் மிகஅதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    லட்சக்கணக்கான பக்தர்கள்

    லட்சக்கணக்கான பக்தர்கள்

    ஏனெனில இதற்கு முன்பு நேற்றும் அதாவது ஆக. 28ம் தேதியும், அதற்கு முன்பு ஜுலை 18ம் தேதியும் ஏகாதேசி நாள்கள் ஆகும். இந்த இரண்டு நாள்களிலும் 3லட்சத்துக்கும் அதிமான மக்கள் கூட்டமாக வந்து தரிசனம் செய்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+