சபாஷ்..! பயங்கர ஆயுதங்களுடன் காரை கடத்தியவர்களை.. துணிச்சலாக விரட்டிப்பிடித்த காவலர்.. வைரல் வீடியோ

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வாடகை காரை கடத்தியவர்களை, பட்டுக்கோட்டையில் காவலர் விரட்டிப் பிடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. காரில் இருந்து அருவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் எல்லீஸ்நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன் மற்றும் வேல்பாண்டி. இவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தில் வாடகைக்குக் கார் ஒன்றை எடுத்து உள்ளனர்.

வாடகைக்கு எடுத்த காரின் ஒட்டுநரை தாக்கிவிட்டு, இருவரும் அந்த காரை கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார் கடத்தல்

கார் கடத்தல்

காஞ்சிபுரத்தில் இருந்து புறவழிச்சாலை வழியே அந்த கார் சென்று கொண்டிருந்தது. அப்போது வெங்கடேசன் மற்றும் வேல்பாண்டி இருவரும் ஓட்டுநரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். திடீரென இருவரும் சேர்ந்து கொண்டு தாக்கியதில் ஒட்டுநர் நிலைகுலைந்து போய்விட்டார். பின்னரே ஒட்டுநரைச் சாலையில் தள்ளிவிட்ட இருவரும் காரை கடத்திச் சென்றுள்ளனர். இதையடுத்து ஒட்டுநர் உடனடியாக காரின் உரிமையாளர் பிராகாஷ்குமாருக்கு இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை

தனது கார் கடத்தப்பட்ட தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரகாஷ்குமார் உடனடியாக இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து காஞ்சிபுர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்குக் கடத்தப்பட்ட கார் குறித்து தகவல்களை அனுப்பி உள்ளார். அதன்படி நேற்று மாலை பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமல கண்ணனுக்கும் இந்த தகவல் கிடைத்துள்ளது.

காவலர் பிரசாந்த்

காவலர் பிரசாந்த்

பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலம் கண்ணனுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருக்கு மருந்து வாங்க அவரது ஜீப் ஓட்டுநர் காவலர் பிரசாந்த் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் உள்ள மருந்துக் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது கடத்தப்பட்ட கார் அங்கு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவலர் பிரசாந்த், இருவரையும் துரத்திச் சென்றுள்ளார். காவலர் தங்களைத் துரத்தி வருவதைப் பார்த்த குற்றவாளிகள் அவரை தாக்கி தள்ளிவிட்டு, தப்பி ஓடி உள்ளனர்.

துரத்திச் சென்று பிடித்த பிரசாந்த்

துரத்திச் சென்று பிடித்த பிரசாந்த்

குற்றவாளி தாக்கியதில் கீழே விழுந்ததில் காவலர் பிரசாந்த்தின் கைகளில் காயம் ஏற்பட்டது. இருப்பினும், விடாமல் குற்றவாளிகளைத் துரத்திச் சென்ற காவலர் பிரசாந்த், அப்பகுதியில் இருந்த போக்குவரத்து காவலர்களின் உதவியுடன் தப்பி ஓடிய வேல்பாண்டி என்பவரை மடக்கிப்பிடித்தனர். இருப்பினும் மற்றொரு குற்றவாளியான வெங்கடேசன் தப்பி ஓடி விட்டார்.

வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

கடத்தப்பட்ட காரை கைப்பற்றிய போலீசார் வேல்பாண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தப்பட்ட காரில் இருந்து அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் 3 மொபைலையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் காவலர் பிரசாந்த்தைக் குற்றவாளிகள் தாக்கிவிட்டுத் தப்பியோடுவது, அவர்களை விடாமல் பிரசாந்த் துரத்திச் சென்று பிடிப்பது ஆகிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி, இணையத்தில் வைரலாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+