காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பாராயணம், திருமஞ்சனம், பிரசாதம் உள்ளிட்ட நடைமுறைகளை தொடர உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அறநிலையத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோவில்கள் மூடப்பட்ட நிலையில், அனைத்து கோவில்களும் திறக்கப்படலாம் என கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் இந்த அறிவிப்பிற்கு முரணாக வரதராஜ பெருமாள் கோவிலில் மட்டும் வழக்கமான நடைமுறைகள் அனுமதிக்கப்படவில்லை என சென்னையை சேர்ந்த ஆனந்த தேசிகன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், வரதராஜப் பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தம், திருமஞ்சனம், அர்ச்சனை, பிரசாதம், வேத பாராயணம், சடாரி போன்ற வழக்கமான நடைமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இந்த வழிபாடுகளுக்கு அனுமதி அளித்து தனியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மார்கழி தொடங்கவுள்ளதால் கோவிலின் வழக்கமான நடைமுறைகளை தொடரும்படி உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு, இந்து சமய அறநிலையத்துறை, கோவில் நிர்வாகம் ஆகியவை பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications